30 சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'30 சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றம்'

Added : செப் 14, 2021
Share
சென்னை-''தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், 30 சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது,'' என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்தது. கூட்டத்தின் முடிவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:தமிழகத்தின் 16வது சட்டசபை முதல் கூட்டத்தொடர், 2021 மே 11, 12; ஜூன் 21 முதல், 24 வரை நடந்தது. இரண்டாம் கூட்டத்தொடர், ஆகஸ்ட் 13ம் தேதி முதல், நேற்று வரை 28 நாட்கள்

சென்னை-''தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், 30 சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது,'' என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்தது. கூட்டத்தின் முடிவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:தமிழகத்தின் 16வது சட்டசபை முதல் கூட்டத்தொடர், 2021 மே 11, 12; ஜூன் 21 முதல், 24 வரை நடந்தது. இரண்டாம் கூட்டத்தொடர், ஆகஸ்ட் 13ம் தேதி முதல், நேற்று வரை 28 நாட்கள் நடந்தது. மாலையிலும் ஒரு நாள் சட்டசபை கூடியது.நேற்று மதியம் 2:00 மணி வரை, மொத்தம் 126 மணி நேரம், 3 நிமிடங்கள் சபை நடந்தது.

இந்த கூட்டத்தொடரில் முதன் முறையாக, 2021 - 22ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் போன்றவை காகிதமில்லா பட்ஜெட்டாக சமர்ப்பிக்கப்பட்டன. மானிய கோரிக்கைகள் மீது, 17 நாட்கள் விவாதம் நடந்தது. இதில், 134 பேர் பேசினர். ஆளும் கட்சியைச் சேர்ந்த 69 பேர், 21 மணி 30 நிமிடங்கள்; அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 28 பேர், 12 மணி நேரம் ஒரு நிமிடம் பேசினர். அ.தி.மு.க.,வினர் இரண்டு நாட்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.அதிக வினாக்கள் கேட்டவர்கள் பட்டியலில், முதல் மூன்று இடங்களில் முறையே, தி.மு.க.,வைச் சேர்ந்த தாயகம் கவி, பா.ம.க.,வைச் சேர்ந்த ஜி.கே.மணி, தி.மு.க.,வைச் சேர்ந்த அரவிந்த் ரமேஷ் ஆகியோர் உள்ளனர்.

அமைச்சர்கள் நேரு, பொன்முடி, வேலு, மகேஷ் ஆகியோர் தலா நான்கு வினாக்களுக்கு பதில் அளித்துள்ளனர். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக, 12 தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்தம் 349 கவன ஈர்ப்புகள் வரப்பெற்று, 81 அனுமதிக்கப்பட்டு, ஏழு தீர்மானத்துக்கு சபையில் விளக்கம் அளிக்கப்பட்டது. அரசின் 30 சட்ட முன்வடிவுகள், மூன்று தனி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.சட்டசபை விதி 110ன் கீழ், 10 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். சட்டசபை கூட்டம் நடந்த அனைத்து நாட்களிலும், 65 பேர் சபைக்கு வந்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X