போர்டு தொழிற்சாலையை தொடர்ந்து நடத்த வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'போர்டு தொழிற்சாலையை தொடர்ந்து நடத்த வேண்டும்'

Added : செப் 14, 2021
Share
சென்னை--முன்னறிவிப்பு இன்றி தொழிற்சாலையை மூடும் அறிவிப்புக்கு, சென்னை போர்டு தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொழிற்சாலையை தொடர்ந்து நடத்தவும் வலியுறுத்தி உள்ளது.சங்கத்தின் பொதுச் செயலர் செந்தில்குமார், போர்டு இந்தியா நிர்வாகத்திடம் அளித்த கடிதம்:போர்டு இந்தியா நிறுவனம், 2022 இரண்டாம் காலாண்டில் உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. எந்த

சென்னை--முன்னறிவிப்பு இன்றி தொழிற்சாலையை மூடும் அறிவிப்புக்கு, சென்னை போர்டு தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொழிற்சாலையை தொடர்ந்து நடத்தவும் வலியுறுத்தி உள்ளது.சங்கத்தின் பொதுச் செயலர் செந்தில்குமார், போர்டு இந்தியா நிர்வாகத்திடம் அளித்த கடிதம்:போர்டு இந்தியா நிறுவனம், 2022 இரண்டாம் காலாண்டில் உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி, 2,638 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொள்ளாமல், இயந்திரங்களை கையாள்வது போல, நிர்வாகம் திடீரென அறிவிப்பு வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிவிப்பை சங்கம் ஏற்காது; கண்டனம் தெரிவிக்கிறோம். தொழிற்சாலையை மீண்டும் தொடர்ந்து நடத்தவோ அல்லது மாற்று நிர்வாகத்திடம் விற்பனை செய்யும் போது தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யவோ வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X