பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்..

Added : செப் 14, 2021
Share
Advertisement
ஆலோசனைக் கூட்டம்விழுப்புரம்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாராயணன் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் அன்பழகன், குருமூர்த்தி, இந்திரா முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் செல்லையா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய

ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாராயணன் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் அன்பழகன், குருமூர்த்தி, இந்திரா முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் செல்லையா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

அவலுார்பேட்டை: திரிபுரா மாநிலத்தில் கட்சி அலுவலக தாக்குதலைக் கண்டித்து அவலுார்பேட்டையில் மா.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஏழுமலை தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பினர்கள் ராஜா, உதயகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார், வட்ட செயலாளர் முருகன் கண்டன உரையாற்றினர்.நிவாரண உதவி வழங்கல்விக்கிரவாண்டி: பாப்பனப்பட்டில் கடந்த 11ம் தேதி தீ விபத்தில் முனியம்மாள், 60; அய்யனார், 32; ஆகியோரது வீடுகள் எரிந்து சேதமானது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, ஆர்.டி.ஓ., அரிதாஸ் தலைமையில், புகழேந்தி எம்.எல்.ஏ., அரசு நிவாரண தொகை 5,000 ரூபாய், அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்கினார். தாசில்தார் தமிழ்ச்செல்வி, மண்டல துணை தாசில்தார் செல்வமூர்த்தி, பி.டி.ஓ.,க்கள் நாராயணன், குலோத்துங்கன் உட்பட பலர் உடனிருந்தனர்.குடிநீர் தொட்டி திறப்பு விழாமயிலம்: வெங்கந்துாரில் 21.45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி பொது நிதியில் இருந்து கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியை அமைச்சர் மஸ்தான், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விழாவிற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் மலர்மன்னன், ஒன்றிய விவசாய அணி பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.அரசு நிவாரண உதவி வழங்கல்திண்டிவனம்: விட்டலாபுரம் சாலையில் உள்ள டி.எம்.ஜி., நகரைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் சிவா, 23: இவர் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி மின்னல் தாக்கி இறந்தார். அரசின் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து .4 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக சிவாவின் தாயார் லட்சுமியிடம், அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

கலெக்டர் மோகன், எஸ்.பி.,ஸ்ரீநாதா, மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,சேதுநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.பி.டி.ஓ., பொறுப்பேற்புகண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றிய கிராம ஊராட்சி பி.டி.ஓ., சிவக்குமார், வானுார் ஒன்றிய அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். முகையூர் ஒன்றிய அலுவலகத்தில் துணை பி.டி.ஓ.,வாக பணிபுரிந்து வந்த சண்முகம் உதவி உயர்வு பெற்று கண்டமங்கலம் ஒன்றிய கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பொறுப்பேற்றார்.மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்செஞ்சி: மா.கம்யூ., சார்பில் மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க வட்ட தலைவர் மாதவன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல்., தடுப்பூசி தொழிற்சாலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிவிக்கிரவாண்டி: கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து விக்கிரவாண்டியில் நடந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிக்கு, ஆர்.டி.ஓ., அரிதாஸ் தலைமை தாங்கினார். தாசில்தார் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் பிரதிவிராஜ் வரவேற்றார். செண்டியம்பாக்கம் தண்டபாணி கலைக்குழுவினரால் கொரோனா குறித்தும், தடுப்பூசி பாதுகாப்பு குறித்தும் நாடக கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்திருவெண்ணெய்நல்லுார்:இளந்துறை கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு,

ஒன்றிய தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி நடன சிகாமணி, ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் ஏழுமலை வரவேற்றார்.கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் விசுவநாதன் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டு தேர்தல் குறித்த ஆலோசனை வழங்கினார்.ஆலோசனைக் கூட்டம்விழுப்புரம்: குழந்தைவேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு,

சங்க தலைவர் திருப்பதி பாலாஜி தலைமை தாங்கினார். ஆனந்த், திருஞானசம்பந்தம், வெங்கடேஷ், கணபதி, சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், தங்கள் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் தனியார் மினரல் வாட்டர் கம்பெனியை மூட வேண்டும். கோவிந்தசாமி நகரில் உள்ள சமுதாய கூடத்தை திறக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X