கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் அரசு கட்டடம் இருக்க ஐகோர்ட் உத்தரவு

Added : செப் 14, 2021
Share
Advertisement
சென்னை-'மாற்றுத் திறனாளிகள் அணுக முடியாத வகையில் அரசு கட்டடங்கள் இருக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில், அரசு கட்டடங்களில் வசதிகளை ஏற்படுத்தக் கோரியிருந்தார்.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில்

சென்னை-'மாற்றுத் திறனாளிகள் அணுக முடியாத வகையில் அரசு கட்டடங்கள் இருக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில், அரசு கட்டடங்களில் வசதிகளை ஏற்படுத்தக் கோரியிருந்தார்.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர் சார்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 'தமிழகத்தில் உள்ள 45 சதவீத அரசு கட்டடங்களில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 'மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்தில் கூறியுள்ள நிபந்தனைகளின்படி, 2022 ஜூன் 15க்குள் வசதிகள் ஏற்படுத்தப்படும்' என கூறப்பட்டுள்ளது.வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் அரசு பிளீடர் முத்துகுமார் ஆஜராகி, ''அனைத்து அரசு கட்டடங்களிலும், அடுத்த ஆண்டுக்குள் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தர அறிவுறுத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.இதையடுத்து முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், 'புராதன கட்டடங்கள் தவிர்த்து, அரசு கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்துவதை உறுதி செய்ய, அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக அரசு பிளீடர் தெரிவித்து உள்ளார். 'மாற்றுத் திறனாளிகள் அணுக முடியாதபடி, எந்த அரசு கட்டடங்களும் இருக்கக் கூடாது; தவறினால், அதிகாரிகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X