பொது செய்தி

தமிழ்நாடு

முதல் மரபணு ஆய்வகம்; சென்னையில் இன்று திறப்பு

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021
Share
Advertisement
சென்னை-தமிழகத்தில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ள, உருமாற்றம் அடையும் கோவிட் வைரசை கண்டறியும் மரபணு ஆய்வகத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.இந்தியாவில் கோவிட்வைரஸ் உருமாற்றத்தை கண்டறிய 10 ஆய்வகங்கள் உள்ளன. ஆனால், தமிழகத்தில் ஒரு ஆய்வகம் கூட இல்லை. தற்போது உருமாறிய கொரோனா வைரஸ்களான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கண்டறிய மாதிரிகள், பெங்களூரு அல்லது

சென்னை-தமிழகத்தில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ள, உருமாற்றம் அடையும் கோவிட் வைரசை கண்டறியும் மரபணு ஆய்வகத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.



latest tamil news


இந்தியாவில் கோவிட்வைரஸ் உருமாற்றத்தை கண்டறிய 10 ஆய்வகங்கள் உள்ளன. ஆனால், தமிழகத்தில் ஒரு ஆய்வகம் கூட இல்லை. தற்போது உருமாறிய கொரோனா வைரஸ்களான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கண்டறிய மாதிரிகள், பெங்களூரு அல்லது புனே ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகின்றன.பரிசோதனை முடிவுகள் வர காலதாமதம் ஏற்படுவதால், தமிழகத்தில் உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ் அடுத்த நிலைக்கு சென்று விடுகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், 4 கோடி ரூபாய் செலவில் மரபணு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.பல்வேறு கருவிகளை உள்ளடக்கிய ஆய்வகத்தை இயக்குவதற்காக, ஆறு பேர் குழுவினர் பெங்களூரில் சிறப்பு பயிற்சியை முடித்து, தயார் நிலையில் உள்ளனர்.


latest tamil news


இவர்களுடன் பணியாற்ற நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 1,000 மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான சோதனை ஓட்டம் முடிந்துள்ளது. இதையடுத்து, மரபணு ஆய்வகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதன் வாயிலாக, தமிழகத்தின் முதல் மரபணு ஆய்வகம் செயல்பாட்டுக்கு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X