பொது செய்தி

இந்தியா

எம்.எல்.ஏ.வாக வருவதில் வருத்தமில்லை; முன்னாள் முதல்வர் எடியூரப்பா

Added : செப் 14, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''சட்டசபை கூட்டத்துக்கு இம்முறை எம்.எல்.ஏ.,வாக வருவதில, எனக்கு எந்த வருத்தமும் இல்லை,'' என, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:என் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக தொடர்ந்து பணியாற்றுவேன். முதல்வராக தான் பணியாற்ற வேண்டுமென்ற அவசியமில்லை. அடுத்த முறை எதிர்பாராமல், சித்தராமையா வெற்றி பெற்றாலும், அவரை எதிர்க்கட்சியிலேயே
எம்.எல்.ஏ.வாக வருவதில் வருத்தமில்லை; முன்னாள் முதல்வர் எடியூரப்பா

பெங்களூரு : ''சட்டசபை கூட்டத்துக்கு இம்முறை எம்.எல்.ஏ.,வாக வருவதில, எனக்கு எந்த வருத்தமும் இல்லை,'' என, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:என் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக தொடர்ந்து பணியாற்றுவேன். முதல்வராக தான் பணியாற்ற வேண்டுமென்ற அவசியமில்லை. அடுத்த முறை எதிர்பாராமல், சித்தராமையா வெற்றி பெற்றாலும், அவரை எதிர்க்கட்சியிலேயே அமர்த்துவோம்.நான் மகிழ்ச்சியுடன்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன். இம்முறை எம்.எல்.ஏ.,வாக சட்டசபை கூட்டத்துக்கு வருவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.அரசு தலைமை கொறடா அருகில் அமர வாய்ப்பளிக்கும்படி, சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அவரும் சம்மதித்துள்ளார்.தலைமை கொறடா பக்கத்தில் அமர்ந்து சட்டசபையில் பங்கேற்பேன். பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில், காங்கிரசார் போராட்டம் நடத்த வேண்டும். அது போன்றே செய்வர் என நம்புகிறேன்.முதல்வர் பசவராஜ் பொம்மை நன்றாக பணியாற்றுகிறார். அவருக்கு அனைத்து விதமான ஒத்துழைப்பையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்.அடுத்த முறையும் பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்த முயற்சிப்பேன். மாநில பா.ஜ., தலைவருடன், சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X