துாய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துாய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 14, 2021
Share
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஊராட்சி ஓ.எச்.டி., ஆப்ரேட்டர், துாய்மைப் பணியாளர் மற்றும் துாய்மைக் காவலர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சிகளில் பணிபுரியும் ஓ.எச்.டி.,
 துாய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஊராட்சி ஓ.எச்.டி., ஆப்ரேட்டர், துாய்மைப் பணியாளர் மற்றும் துாய்மைக் காவலர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சிகளில் பணிபுரியும் ஓ.எச்.டி., ஆப்ரேட்டர், துாய்மைப் பணியாளர், துாய்மைக் காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.கொரோனாவால் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் உதவித் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X