பொது செய்தி

இந்தியா

இலவச கண் பரிசோதனை முகாம்; பாஜ., எம்.பி. தேஜஸ்வி துவக்கம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
பெங்களூரு : அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ பரிசோதனை, கண் பரிசோதனை முகாமை, பெங்களூரு தெற்கு பா.ஜ., --- எம்.பி., தேஜஸ்வி சூர்யா நேற்று துவக்கி வைத்தார்.பெங்களூரின் பி.இ.எஸ்., பள்ளி ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி,
இலவச கண் பரிசோதனை முகாம்; பாஜ., எம்.பி. தேஜஸ்வி துவக்கம்

பெங்களூரு : அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ பரிசோதனை, கண் பரிசோதனை முகாமை, பெங்களூரு தெற்கு பா.ஜ., --- எம்.பி., தேஜஸ்வி சூர்யா நேற்று துவக்கி வைத்தார்.

பெங்களூரின் பி.இ.எஸ்., பள்ளி ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம், செப்டம்பர் 13 முதல் 18 வரை நடக்கவுள்ளது. அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, கல்லுாரியின், பி.யு.சி., வரையிலான மாணவர்கள் பயனடையலாம்.இம்முகாமில் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரும் பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனை முடிந்த பின், கண்ணாடியும் இலவசமாக வழங்கப்படும்.சமீப நாட்களாக, தொழில் நுட்ப உபகரணங்களை, அதிகம் பயன்படுத்துவதால், குழந்தைகளின் கண்கள் சிறு வயதிலேயே பாதிக்கப்படுகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பா.ஜ., யுவ மோர்ச்சா சார்பில் இம்முகாம் நடத்தப்படுகிறது.இப்பணியில் அகர்வால் கண் மருத்துவமனை, போர்டீஸ் மருத்துவமனை எங்களுடன் கை கோர்த்துள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்துக்கு, இத்தகைய முகாம்கள் முக்கிய பங்கு வகிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X