பொது செய்தி

இந்தியா

பெண் மீது தாக்குதல்; குற்றவாளிகள் கைது

Added : செப் 14, 2021
Share
Advertisement
யாத்கிர் : யாத்கிரில், பெண் ஒருவரை நிர்வாணமாக்கி தாக்கும் 'வீடியோ' வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.பரபரப்புபெண் ஒருவரின் ஆடையை கழற்றி நிர்வாணமாக்கி, நான்கைந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலை தளங்களில் பரவி கர்நாடகாவில் பெரும் பரபரப்பை

யாத்கிர் : யாத்கிரில், பெண் ஒருவரை நிர்வாணமாக்கி தாக்கும் 'வீடியோ' வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.பரபரப்புபெண் ஒருவரின் ஆடையை கழற்றி நிர்வாணமாக்கி, நான்கைந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலை தளங்களில் பரவி கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.'காலில் விழுகிறேன். என்னை விட்டு விடுங்கள்; அடிக்க வேண்டாம்' என்று அந்த பெண் கன்னட மொழியில் எவ்வளவு கெஞ்சியும் காம கொடூரன்கள் விடாமல் தாக்குகின்றனர்.

இச்சம்பவம் யாத்கிர் மாவட்டம், சஹாபுரா நகரில், 9 மாதங்களுக்கு முன் நடந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 30 - 35 வயது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.இது குறித்து யாத்கிர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., வேதமூர்த்தி நேற்று கூறியதாவது:கைது சம்பவம் யாத்கிரில் நடந்திருப்பது உண்மை. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பல குற்றவாளிகள் இருப்பதால் அவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாரும் புகார் செய்யவில்லை. ஆனாலும், சஹாபுராநகர் காவல் நிலையத்தில் சுய வழக்கு பதிவு செய்யப்படும்.பாதிக்கப்பட்ட பெண் யார் என்றும் தெரியவில்லை. விரைவில் கண்டறிந்து அவரிடம் புகார் பெறப்படும். நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.மைசூரில் கடந்த மாதம், 24ல், சாமுண்டி மலை அடிவாரத்தில் எம்.பி.ஏ., மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் இன்னும் மறையாத நிலையில், யாத்கிரில் நடந்துள்ள அதுபோன்ற கொடூரம் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X