பொது செய்தி

தமிழ்நாடு

மேம்பாலத்தில் பஸ்கள் நிறுத்தம்: திண்டிவனத்தில் விபத்து அபாயம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் மேம்பாலத்தின் மேல் பகுதியில் பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கி விடுவதால் விபத்து அபாயம் உள்ளது.திண்டிவனத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன், மேம்பாலம் கட்டப்பட்டது. தொலை துாரம் செல்லும் வாகனங்கள், மேம்பாலத்தின் கீழ் பகுதிக்கு வராமல், மேம்பாலத்தின் வழியாக பல்வேறு ஊர்களுக்கு சிரமம்
 மேம்பாலத்தில் பஸ்கள் நிறுத்தம்: திண்டிவனத்தில் விபத்து அபாயம்

திண்டிவனம் : திண்டிவனம் மேம்பாலத்தின் மேல் பகுதியில் பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கி விடுவதால் விபத்து அபாயம் உள்ளது.திண்டிவனத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன், மேம்பாலம் கட்டப்பட்டது.

தொலை துாரம் செல்லும் வாகனங்கள், மேம்பாலத்தின் கீழ் பகுதிக்கு வராமல், மேம்பாலத்தின் வழியாக பல்வேறு ஊர்களுக்கு சிரமம் இல்லாமல் சென்று வந்தது.இந்நிலையில் சிறிய பகுதியாக உள்ள மேம்பாலத்தின் மேல்பகுதியில், திருவண்ணாமலை, வேலுார், காஞ்சிபுரம், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், திண்டிவனத்தில் இறங்கும் பயணிகளை, இறக்கி விட்டு செல்கின்றது.இவ்வாறு பயணிகளை இறக்குவதால், மேம்பாலத்தின் மேல்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலையைக் கடக்கும் பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது.இதை கருத்தில் கொண்டு, திண்டிவனம் போலீசார், மேம்பாலத்தின், மேல்பகுதியில் பஸ்களை நிறுத்தி, பயணிகளை இறக்கிவிடக் கூடாது என்று எச்சரிக்கை பலகையை சில மாதங்களுக்கு முன்பு வைத்தனர்.

ஆனால், புதுச்சேரியிலிருந்து திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் அரசு பஸ்கள், மேம்பாலத்தின் மேல்பகுதியில் பஸ்களை போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி, பயணிகளை இறக்கியும், ஏற்றியும் செல்கின்றனர்.இதனால், அங்கு ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் பஸ் நிலையம் இருந்தும், போலீசார் எச்சரிக்கையையும் மீறி, அரசு பஸ் டிரைவர்கள், பயணிகளை அவதிப்படுத்தும் வகையில், மேம்பாலத்தின் மேல் பகுதியில் அடவாடியாக இறக்கி விட்டுச் செல்கின்றனர்.மேம்பாலத்தின் மேல்பகுதியில் சாலையைக் கடப்பவர்கள் விபத்தில் சிக்கி கொள்வதை தடுக்கும் வகையில், மேம்பாலத்தின் மேல்பகுதியில் பஸ்களை நிறுத்தும் டிரைவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X