பொது செய்தி

இந்தியா

சீக்ரெட் சிங்காரம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
தானா கிடைச்சது பதவி!ஹுப்பள்ளி -- தார்வாட் கார்ப்பரேஷன் தேர்தலில் பூ கட்சியில் தீவிரமா செயல்பட்ட பெண்ணுக்கு போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டது.கட்சிக்கு 'குட் பை' சொல்லி விட்டு தனக்குள்ள செல்வாக்கை காட்ட, சுயேச்சையா போட்டியிட்டார்.அந்த வார்டில் தேசியக் கட்சிகளும் போட்டியிட்ட போதிலும், இவர் வெற்றி பெற்றார். இவரோட அதிர்ஷ்டம், துணை மேயருக்கு ஒதுக்கப்பட்ட இட

தானா கிடைச்சது பதவி!ஹுப்பள்ளி -- தார்வாட் கார்ப்பரேஷன் தேர்தலில் பூ கட்சியில் தீவிரமா செயல்பட்ட பெண்ணுக்கு போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டது.கட்சிக்கு 'குட் பை' சொல்லி விட்டு தனக்குள்ள செல்வாக்கை காட்ட, சுயேச்சையா போட்டியிட்டார்.

அந்த வார்டில் தேசியக் கட்சிகளும் போட்டியிட்ட போதிலும், இவர் வெற்றி பெற்றார். இவரோட அதிர்ஷ்டம், துணை மேயருக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு படி, இப்பெண்ணுக்கு தான் அந்த வாய்ப்பு உள்ளது.இதனால், அவருக்கு துணை மேயர் பதவி கிடைச்சிடுச்சு. ஆயினும் மறுபடியும் அவர் தன்னை பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டார்.காலம் மாறிப் போச்சு!சென்ட்ரலிலும், ஸ்டேட்டிலும் பூக்காரங்க ஆட்சி.

இதில் ஸ்டேட்டில் பூக்கார ஆட்சியை உருவாக்கின பெருமை, எடிஜிக்கு தான் சொந்தமாம்.அவரையே முதல்வராக பட்டாபிஷேகம் செய்து அசம்பிளியில் முதல் வரிசையில், முதல் இடத்தில் அமர செய்தாங்க.இரண்டு ஆண்டுக்குப் பின் அதே., பூக்காரங்க அவரோட பதவியை வயசை காரணம் காட்டி ரிட்டயர்ட் செய்திட்டாங்க.கால சக்கர சுழற்சியில் அதே பூக்கார ஆட்சியில், நேற்று சட்டசபையில் அவரை கடைசி வரிசையில், இரண்டாவது இடத்தில் அமர செய்துட்டாங்க.எவ்வளவு வேகமாக காலம் மாறி, முன் வரிசைக்காரர், பின் வரிசைக்கு தள்ளப்பட்டாரேன்னு பலரும் யோசிக்கிறாங்க.அவசர அவசரமாய்..

.நீண்ட நாட்களுக்குப் பின், நேற்று அசம்பிளி கூட்டத்தொடர் தொடங்கியது. 32 பேருக்கு இரங்கல் தெரிவிச்சாங்க. சபையோட சபாநாயகர், 41 நிமிஷம் தனது இரங்கல் உரை நிகழ்ச்சியில் பேசினாரு.மாநிலத்தில் முதல்வர் பதவியேற்று நடக்கிற முதல் கூட்டத்தொடரில் 10 நிமிடமே பேசி, வேகமா உரையை முடித்து, குஜராத்துக்கு விமானத்தில் பறந்துட்டாரு.எல்லாமே அவசர அவசரமாகவே முதல்வரோட நடவடிக்கை இருந்து வருவதாக அசம்பிளிக்காரங்க பேசிக்கிறாங்க.மக்கள் மீது பாசம்!நம்மளோட ஸ்டேட்ல இருந்து டெல்லிக்குப் போய், மத்திய இணையமைச்சரா ஆகிருக்கும் பெண், சிலிகான் சிட்டியில் இருந்து செங்கோட்டைக்கு செல்ல விமானம் ஏறினாரு.அந்த விமானம், திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது.

அந்த விமானத்தில் இருந்து பெண் மந்திரி உட்பட பயணியர் அனைவரையும் கீழே இறங்கிட்டாங்க.மத்திய மந்திரி என்பதாலே 'ஸ்பெஷல் பிளைட்' ஏற்பாடு செய்யலாமான்னு மேடத்தை ஆபிசர்கள் கேட்டாங்க.அவசியம், அவசரம் இருப்பதால் தான் விமானத்தில் பயணம் செய்கின்றனர். எனக்கு மட்டும், 'ஸ்பெஷல் பிளைட்' வேணாம். அனைத்து பயணியரும் செல்வதற்கான விமானம் இயக்க வேண்டும் என கூறி, அடுத்த பிளைட்டில் எல்லா பயணியரையும் அமர வைத்து, கடைசியாக பெண் மந்திரியும் அந்த பிளைட்டில் பயணம் செய்தாராம்.மந்திரி பதவி கிடைச்சதும் மக்கள் நலன் மீது பாசம் அதிகமாயிடுச்சாம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X