பொது செய்தி

இந்தியா

'இ-பீட்' ரோந்து முறை

Added : செப் 14, 2021
Share
Advertisement
பெங்களூரு : குற்றங்களை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதை உறுதி செய்யும் வகையில், பெங்களூரு நகர் முழுதும் 'இ - பீட்' எனும் புதிய ரோந்து முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.குற்றச்சம்பவங்கள் தடுக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணிக்கின்றனர். சில போலீசார், ரோந்து பணியில் ஈடுபடாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டு அலட்சியமாக செயல்படுவதாக

பெங்களூரு : குற்றங்களை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதை உறுதி செய்யும் வகையில், பெங்களூரு நகர் முழுதும் 'இ - பீட்' எனும் புதிய ரோந்து முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

குற்றச்சம்பவங்கள் தடுக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணிக்கின்றனர். சில போலீசார், ரோந்து பணியில் ஈடுபடாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டு அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.போலீசார் நேர்மையான முறையில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனரா என்பதை கண்காணிக்க, 'இ - பீட்' எனும் புதிய முறை பெங்களூரு நகரின், எட்டு மண்டலங்களின் தலா ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டது.

இச்சோதனை வெற்றி பெற்றதால், நகர் முழுதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறை மூலம் ரோந்து செல்வதில் இருந்து போலீசார் தப்பிக்க முடியாது.ஏனென்றால், எந்தெந்த மக்கள் கூடும் பகுதியில் சென்றனர்; எத்தனை மணிக்கு சென்றனர்; யாரையாவது சந்தித்தீர்களா; எவ்வளவு நேரம் குறிப்பிட்ட இடத்தில் இருந்தீர்; அந்த இடத்தில் படம் எடுத்து பதிவேற்றம் செய்துள்ளீரா என பல கேள்விகளுக்கு போலீசார், மொபைல் போன் மூலம் பதிலளிக்க வேண்டும்.ஒரு வேளை குறிப்பிட்ட இடத்துக்கு செல்லாமல் பொய் சொல்லும் பட்சத்தில், எளிதாக கண்டுபிடித்து விடலாம்

.இதற்கு முன் குறிப்பிட்ட இடத்துக்கு செல்லும் போலீஸ், அங்கு வைக்கப்படும் புத்தகத்தில் நேரத்தையும், முழு விபரத்தையும் குறிப்பிட வேண்டும். இதனால் எந்த நேரத்துக்கு சென்றோம் என சிலர் எழுதி வந்தனர்.இதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியாது. புதிய முறையால் ரோந்தில் கட்டாயமாக ஈடுபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X