பொது செய்தி

இந்தியா

காங்கிரசார் மாட்டுவண்டி போராட்டம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து, கர்நாடக காங்கிரசார் நேற்று நடத்திய மாட்டு வண்டி போராட்டத்தால், பெங்களூரு நகர சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பெங்களூரு சாலைகள், காங்கிரசாரின் போராட்டத்தால் பிதுங்கின. இது போன்ற போராட்டங்களுக்கு தனி சாலையை ஒதுக்க வேண்டும் என,
காங்கிரசார் மாட்டுவண்டி போராட்டம்

பெங்களூரு : பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து, கர்நாடக காங்கிரசார் நேற்று நடத்திய மாட்டு வண்டி போராட்டத்தால், பெங்களூரு நகர சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பெங்களூரு சாலைகள், காங்கிரசாரின் போராட்டத்தால் பிதுங்கின. இது போன்ற போராட்டங்களுக்கு தனி சாலையை ஒதுக்க வேண்டும் என, நெரிசலில் சிக்கி சின்னாபின்னமான மக்கள் கூறினர். நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் 'காஸ்' விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் மாநிலத்தின் 100 பெட்ரோல் 'பங்க்'குகள் முன் கடந்த மாதம் போராட்டம் நடந்தது. இதற்கிடையில், கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் நேற்று மாட்டு வண்டிகள் மூலம் ஊர்வலமாக விதான் சவுதா வந்தனர்.சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, குமாரகிருபா வீட்டிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், சதாசிவநகர் வீட்டிலிருந்தும் மாட்டு வண்டிகளில் புறப்பட்டனர்.ஒரே வண்டியில் பயணம்சிறிது துாரம் வந்த பின், இருவரும் ஒரே வண்டியில் ஏறிக் கொண்டனர். கயிறு பிடித்தும், தடியால் மாடுகளை அடித்தும் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல், முன்னாள் அமைச்சர்கள் எச்.கே.பாட்டீல், எம்.பி.பாட்டீல், மாநில செயல் தலைவர் ஈஸ்வர் கண்ட்ரே உட்பட பலர் பங்கேற்றனர்.நகரின் முக்கிய சாலைகள் வழியே இவர்கள் பயணம் செய்ததால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. மக்கள் சொல்லொணா துயரம் அனுபவித்தனர்.

காங்கிரஸ் மாட்டு வண்டி போராட்டத்தால், சதாசிவநகர், குமாரகிருபா சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, வின்சர் மேனர், சேஷாத்திரி சாலை, ராஜ்பவன் சாலை.சாளுக்கியா சதுக்கம், கன்னிங்காம் சாலை, கப்பன் சாலை, அம்பேத்கர் வீதி உட்பட விதான் சவுதா சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வாகன சவாரிகள் நீண்ட வரிசையில் நின்று, அரசியல் தலைவர்களை திட்டி தீர்த்தனர்.எனினும், விதான் சவுதாவுக்குள் மாட்டு வண்டிகள் செல்ல முடியாமல் தடுப்புகள் அமைத்து போலீசார் மறித்தனர். இதனால் கோபம் அடைந்த சித்தராமையா, 'மாட்டு வண்டிகளில் விதான் சவுதாவுக்கு வரக்கூடாது' என்று சட்டம் உள்ளதா; அனுமதிக்கவில்லை என்றால், சட்டசபையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படும்' என்று காவலர்களை எச்சரித்தார்.

இதையடுத்து, இரண்டு மாட்டு வண்டிகள் மட்டும் விதான் சவுதாவுக்குள் அனுமதிக்கப்பட்டன.பா.ஜ., குற்றச்சாட்டுவிதான் சவுதாவில் சித்தராமையா கூறியதாவது:பெட்ரோல், டீசல், சமையல் காஸ் மட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன. இதற்கு, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது, பா.ஜ., குற்றஞ்சாட்டுகிறது.ஆனால் விலை உயர்வுக்கு, தற்போதைய பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் முழு காரணம். விலை உயர்வை கட்டுப்படுத்தாமல், தோல்விக்கான பழியை காங்கிரஸ் மீது போடுகின்றனர்.

காங்கிரஸ், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களை பணத்தாசை காண்பித்து பா.ஜ.,வினர் இழுத்துக் கொண்டனர். இதை, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் பகிரங்கப்படுத்தி உள்ளார். அவருக்கு, 30 கோடி ரூபாயை பா.ஜ.,வினர் வழங்கியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர் போராட்டம்மாநில காங்., தலைவர் சிவகுமார் கூறியதாவது:ஒவ்வொரு நாளும் உதயமாகும் போதும், பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தான் காண்கிறோம். ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போதைய பா.ஜ., அரசு செய்தது போல, முந்தைய அரசுகள் விலை உயர்த்தவில்லை.இந்தியாவை விட பின்தங்கிய இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூடான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளன. உலகிலேயே இந்திய அரசு தான் பெட்ரோல், டீசல் மீது அதிகபட்ச வரி விதித்துள்ளது. இதை கண்டித்து சட்டசபைக்குள்ளேயும், வெளியேயும் தொடர் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X