பொது செய்தி

இந்தியா

இயற்கையுடன் இணைந்த வாழ்வு தேவை துணை ஜனாதிபதி வெங்கையா பேச்சு

Added : செப் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'புதிய இந்தியாவின் பலமாக உள்ள இளைஞர்கள், உற்பத்தி மூலம் நாட்டை முன்னேற்றுவர்' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.புதுச்சேரி, பிள்ளைச்சாவடியில் அமைந்துள்ள தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை நேற்று துவக்கி வைத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:புதுச்சேரியின் முதல் மாநில பல்கலைக் கழகம் இது. பொறியியல் கல்லுாரி தற்போது பல்கலைக் கழகமாக தரம்
 இயற்கையுடன் இணைந்த வாழ்வு தேவை   துணை ஜனாதிபதி வெங்கையா பேச்சு

புதுச்சேரி : 'புதிய இந்தியாவின் பலமாக உள்ள இளைஞர்கள், உற்பத்தி மூலம் நாட்டை முன்னேற்றுவர்' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

புதுச்சேரி, பிள்ளைச்சாவடியில் அமைந்துள்ள தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை நேற்று துவக்கி வைத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:புதுச்சேரியின் முதல் மாநில பல்கலைக் கழகம் இது. பொறியியல் கல்லுாரி தற்போது பல்கலைக் கழகமாக தரம் உயர்ந்துள்ளது. இதனால் அதிக வாய்ப்புகள் உருவாகும். புதிய படிப்புகள் தொடங்க முடியும்.'ராஷ்ட்ரீய உச்சதர் சிக் ஷா அபியான்' (ரூசா) திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், தேசிய அளவில் தரம் உயரும். புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நாடு முன்னேறி, வளம்பெற்று மக்கள் மகிழ்ச்சி பெறுவதும் அவசியம்.வளர்ந்த நாடுகள் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துகின்றன. இந்தியா வளர்ந்து வரும் நாடாக உள்ள நிலையில், பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, வறுமை ஆகியவற்றையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.குறிப்பாக, இங்கு 23 சதவீதத்தினர் ஏழ்மை நிலையில் உள்ளனர். அது மிகப்பெரிய சவால். அவர்களை மேம்படுத்தி வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும். சுதந்திரத்துக்கு பிறகு அனைவருக்கும் கல்வியறிவு அளிக்க திட்டம் கொண்டு வரப்பட்டு, தற்போதும் 20 சதவீத மக்கள் கல்வி கற்காத சூழலில் உள்ளனர்.

அத்துடன், சமூகத்தில் பரவியுள்ள பாலின பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். பெண்களுக்கு சமவாய்ப்பு தரவேண்டும். ஆண், பெண் பாகுபாடு கூடாது.தற்போது பருவநிலை மாற்றம் வளர்ந்த நாடுகளில் பெரும் பாதிப்பாக உள்ளது. குறிப்பாக, வெப்பநிலை உயர்வு, வெள்ளம் ஆகியவை அதிகரித்துள்ளன. பிரான்சில் நடந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம் குறித்து விவாதித்தபோது, அனைவரும் இயற்கை சூழலை காக்க ஒன்றுபட வலியுறுத்தப்பட்டது.இதனால் நாம் வேர்களைத் தேடி செல்ல வேண்டும். ஆரோக்கியமான உணவு, இயற்கையுடன் இணைந்த வாழ்வு, கலாசாரம் ஆகியவை எதிர்காலத்துக்கு தேவையாகும்.

குறிப்பாக பீட்சா, பர்கர் நம் சூழலுக்கு உகந்தது அல்ல. நம் உணவே சிறந்தது. உடல் பயிற்சி அவசியம். அதனால் மனவளம் மேம்படும்.இன்குபேஷன் மையம் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் வர வேண்டும்.சரியான வாய்ப்பு தந்தால் இளையோர் முன்னேறுவர். இந்தியா இன்று தொழில்முனைவு மற்றும் கண்டுபிடிப்பு துறைகளில் புதிய உயரங்களை எட்டி வருகிறது. 45 சதவீத 'ஸ்டார்ட் அப்' நிறுவன தலைமை குழுக்களில் ஒரு பெண் தொழில்முனைவோர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஆரோக்கியமான போக்கு; அதிகமான பெண்களை தொழில் முனைவோராக ஊக்குவிக்கும்.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 54 சதவீதத்தினர் 25 வயதிற்குட்பட்டவர்கள். இதுதான் புதிய இந்தியாவின் பலம். இந்த இளைஞர்களால், நமது நாட்டை உற்பத்தி மூலம் முன்னேற்ற முடியும்.மத்திய அரசு, புதுமை, தொழில் முனைவோர் மற்றும் பரிசோதனை மனப்பான்மையை ஊக்குவித்து வருகிறது. 'ஸ்டார்ட் அப்'களை ஆதரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விதிமுறைகளை எளிதாக்கி, வரி விலக்கு வழங்குகிறது.

ஸ்டார்ட் அப்களுக்கு தேவையான நிதியை வழங்க, ரூ. 10 ஆயிரம் கோடி நிதி வழங்கி உள்ளது.உலகளவில் இலவச தடுப்பூசி இந்தியாவில்தான் செலுத்தப்படுகிறது. தேர்தலில் பூத் சிலிப் தருவது போல் மக்கள் பிரதிநிதிகள் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்த, கட்சிகளைத் தாண்டி பணியாற்றுவது அவசியம்.நம் நாட்டில் சுதந்திரப் போராட்ட தியாகிகளான அரவிந்தர், பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, பசும்பொன் முத்துராமலிங்கம் பிள்ளை, கட்டபொம்மன் ஆகிய முக்கியத் தலைவர்களின் வாழ்க்கையை இளையோர் தெரிந்து கொள்வது அவசியம்.

இது பாடநுாலில் இடம் பெறவேண்டும்.தங்கள் வாழ்க்கை விவரங்களை ஆங்கிலேயர்கள் பாடத்திட்டத்தில் இணைத்து விட்டனர். அவர்கள் நாட்டு வீரர்களை அறிவதை விட, நமது வீரர்களை அறிவது அவசியம். மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் நம் நாட்டு தியாகிகளின் விவரங்களை பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X