பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பிரச்னையை கண்டித்து பஞ்., அலுவலகம் முற்றுகை

Added : செப் 14, 2021
Share
Advertisement
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.நடுவீரப்பட்டு அடுத்த சிலம்பிநாதன்பேட்டை கிழக்கு தெரு, தெற்கு தெரு பகுதிகளுக்கு ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள போர்வெல் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏற்றி குடிநீர் வழங்கப்பட்டது. இந்த குடிநீர் போர்வெல் ஒரு மாதத்திற்கு முன் பழுதடைந்தது. இதனால்
 குடிநீர் பிரச்னையை கண்டித்து  பஞ்., அலுவலகம் முற்றுகை

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

நடுவீரப்பட்டு அடுத்த சிலம்பிநாதன்பேட்டை கிழக்கு தெரு, தெற்கு தெரு பகுதிகளுக்கு ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள போர்வெல் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏற்றி குடிநீர் வழங்கப்பட்டது. இந்த குடிநீர் போர்வெல் ஒரு மாதத்திற்கு முன் பழுதடைந்தது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு அவதியடைந்தனர்.

இது குறித்து அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் 100 பேர் நேற்று காலை 10.00 மணிக்கு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சு வார்த்தைக்கு யாரும் வராததால் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X