பொது செய்தி

இந்தியா

பல்கலைக்கழகங்கள் துவங்குவதால் பாதிப்பு இல்லை; முதல்வர் ரங்கசாமி 'பளீச்'

Added : செப் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ''கல்லுாரிகளை பல்கலைக் கழகங்களாக மாற்றுவதால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது'' என முதல்வர் ரங்கசாமி பேசினார்.புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் துவக்க விழாவில் அவர் பேசியதாவது:புதுச்சேரி பொறியியல் கல்லுாரி, கடந்த 1986ல் 200 ஏக்கரில், 150 மாணவர்களுடன் துவக்கப்பட்டது. தற்போது கல்லுாரி வளர்ச்சி பெற்று, 2000 மாணவர்கள் உள்ளனர்.நான் டில்லிக்கு சென்று

புதுச்சேரி : ''கல்லுாரிகளை பல்கலைக் கழகங்களாக மாற்றுவதால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது'' என முதல்வர் ரங்கசாமி பேசினார்.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் துவக்க விழாவில் அவர் பேசியதாவது:புதுச்சேரி பொறியியல் கல்லுாரி, கடந்த 1986ல் 200 ஏக்கரில், 150 மாணவர்களுடன் துவக்கப்பட்டது. தற்போது கல்லுாரி வளர்ச்சி பெற்று, 2000 மாணவர்கள் உள்ளனர்.நான் டில்லிக்கு சென்று அமைச்சர்களை சந்திக்கும் போது புதுச்சேரி பொறியியல் கல்லுாரி சிறந்த கல்லுாரியாக இருப்பதாக கூறுவர். இக்கல்லுாரியில் படிக்கும் மாணவர்களை பல நிறுவனங்கள் ஆர்வத்துடன் தேர்வு செய்கின்றன.

அரசு பொறியியல் கல்லுாரிக்கு தனி மரியாதை உள்ளது. இங்கு படித்து முடித்த பலர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.2015ல் தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகமாக மாற்ற அனுமதி கிடைத்தது. இது, மாநிலத்தின் முதல் பல்கலைக் கழகம்.அதேபோல் வேளாண் பல்கலைக்கழகம், மருத்துவ பல்கலைக் கழகம் விரைவில் வர உள்ளன. அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. இவை மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுக்கும்.பல்கலைக்கழகமாக மாறினால் கட்டணம் உயரும், மாநில மாணவர்களுக்கு இடம் கிடைக்காது என்ற அச்சம் உள்ளது. மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வெளி மாநில, வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வர வாய்ப்புள்ளது.ஆராய்ச்சி நிறுவனமாக வளர்ந்து வரும் இந்த கல்லுாரி தொழில்நுட்பப் பல்கலைக் கழகமாக மாற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதன் இணைப்பாக காரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லுாரி உள்ளது. புதுச்சேரிக்கு இது மேலும் பெருமை சேர்க்கும்.இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்விழாவில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X