பொது செய்தி

இந்தியா

சூரியஒளி மின்சக்தி கருவிகள் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் துணை ஜனாதிபதி வலியுறுத்தல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'சூரிய ஒளி மின்சக்தி தகடுகள் மற்றும் கருவிகளின் தொகுப்புகளை உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைப்பதை மாநிலங்கள் ஊக்குவிக்க வேண்டும்'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2.5 மெகாவாட் திறனுள்ள சூரியஒளி மின்சக்தி நிலையத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, பல்கலைக் கழக நேரு அரங்கில் நேற்று நடந்தது. துணைவேந்தர் குர்மீத் சிங்

புதுச்சேரி : 'சூரிய ஒளி மின்சக்தி தகடுகள் மற்றும் கருவிகளின் தொகுப்புகளை உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைப்பதை மாநிலங்கள் ஊக்குவிக்க வேண்டும்'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2.5 மெகாவாட் திறனுள்ள சூரியஒளி மின்சக்தி நிலையத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, பல்கலைக் கழக நேரு அரங்கில் நேற்று நடந்தது. துணைவேந்தர் குர்மீத் சிங் வரவேற்றார்.சூரிய ஒளி மின்சக்தி நிலையத்தை துவக்கி வைத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச அரசுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.பருவநிலை மாற்றம் மற்றும் அதன் பாதிப்புகள் கவலை அளிப்பதாக உள்ளன. நமது அதிகரிக்கும் எரிசக்தி தேவைகளை நிறைவேற்ற, சூரிய மின்சக்தி, காற்று மின்சக்தி, நீர் மின்சக்தி போன்றவை மாற்று எரிசக்தியாக இருக்கும்.இதில் அண்மைக் காலங்களில் சூரியஒளி மின் உற்பத்தி மிக முக்கியமாக விளங்குகிறது.உள்நாட்டில் சூரியஒளி சேமிப்பு கலன்கள் மற்றும் சூரியஒளி கட்டமைப்பு தயாரிப்பில் பற்றாக்குறை நிலவுகிறது.சூரியஒளி மின்சக்தி தகடுகள் மற்றும் கருவிகளின் தொகுப்பை இந்தியா இன்னும் அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. இதனைக் குறைக்க, இவற்றை 'ஆத்ம நிர்பார் 'திட்டத்தின் கீழ் உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும்.இதற்கு அரசு மானியம் வழங்கி, சிறு குறு உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மாநிலங்கள் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவற்றின் உற்பத்தியில் மாநிலங்கள் தீவிரமாக பங்காற்றுவதன் மூலம் சூரிய ஒளி மின்சக்தியில் தற்சார்பு நிலையை அடைய முடியும்.சூரியஒளி மின் தகடுகள் உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் பயிற்சிபெற்ற நபர்கள் குறைவாக உள்ளனர். இது, இத்துறையின் வேகமான வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது.இத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றுவதில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்ய வேண்டும்.பொறியியல் கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இதனை கவனத்தில் கொண்டு, மாணவர்களுக்கு இத்துறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகளை வழங்க வேண்டும்.சூரிய மித்ரா திட்டம், இத்துறையில் இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்கிறது. அதே நேரத்தில் சூரியஒளி மின்சக்தி தொடர்பாக சிறு தொழில் துறையினரை ஊக்குவிக்க வேண்டும்.அடுத்த சில ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வளர்ச்சிக்கு சாத்தியம் உள்ளது. எரிசக்தி மாற்றத்தில் உலகளவில் முன்னணி நாடாக இந்தியா மாறிவருகிறது.40 ஜிகாவாட்டுக்கு மேற்பட்ட சூரிய ஒளி மின்சக்தி கருவிகள் நம்நாட்டில் பொருத்தப்பட்டுள்ளன. சூரிய ஒளி மின்சக்தி திறனில் உலகளவில், இந்தியா 5வது இடத்தில் உள்ளது.சூரிய ஒளி மின்சக்தி துறையில் புத்தாக்கம் முக்கியமானது. நிலப்பகுதியில் சூரியஒளி மின்சக்தி தகடுகளை பொருத்துவதற்கு மாற்றாக, மிதவை சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்துவதற்கான மாற்று வழிகளை ஆராய வேண்டும்.தெலுங்கானா ராமகுண்டத்தில் 100 மெகாவாட் திறனுள்ள மிதக்கும் சூரியஒளி மின்சக்தி நிலையத்தை என்.டி.பி.சி., அமைத்துள்ளது. கட்டடத்தின் கூரைகள் மீது சூரியஒளி மின்சக்தி தகடுகள் பொருத்துவதும், நிலையானது என்பதால், அதுவும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஆராய்ச்சி திட்டங்களை பல்கலைக் கழகங்கள் மேற்கொள்ள வேண்டும்.இறுதி ஆண்டு படிப்பில், மாணவர்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் திட்டங்கள் மேற்கொள்ளவும், வேலை வாய்ப்பு பயிற்சி பெறவும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.இது, வேலைவாய்ப்பை மேம்படுத்துவதோடு சூரிய மின்சக்தி துறையில் புத்தாக்கம், புதிய கண்டுபிடிப்புகள், முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X