பொது செய்தி

தமிழ்நாடு

கடலூரில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் தொகுதியில் அடிப்படை வசதிகள் தீவிரமாக நிறைவேற்றப்படுகிறது என, அய்யப்பன் எம்.எல்.ஏ., பேசினார்.கடலுார் ஊராட்சி ஒன்றியம், பாதிரிக்குப்பம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். பின், அவர் பேசுகையில், 'தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுரைப்படி கடலுார் தொகுதியில் நகரம் மற்றும் கிராமங்களில்

கடலுார் : கடலுார் தொகுதியில் அடிப்படை வசதிகள் தீவிரமாக நிறைவேற்றப்படுகிறது என, அய்யப்பன் எம்.எல்.ஏ., பேசினார்.

கடலுார் ஊராட்சி ஒன்றியம், பாதிரிக்குப்பம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். பின், அவர் பேசுகையில், 'தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுரைப்படி கடலுார் தொகுதியில் நகரம் மற்றும் கிராமங்களில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தீவிரமாக நிறைவேற்றப்படுகிறது' என்றார்.ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, தாசில்தார் பலராமன், பி.டி.ஓ.,க்கள் சக்தி, அசோக்பாபு முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் சரவணன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் தி.மு.க., நகர செயலாளர் ராஜா, டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் பிரகாஷ், அரிமா சங்கம் தினகரன், தொழிலதிபர் சக்திவேல், ஊராட்சி செயலாளர் வேல்முருகன், துாய்மை பணி மேற்பார்வையாளர் ஜெயராமன், சக்திவேல், கவி நிலவு உட்பட பலர் பங்கேற்றனர்.தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தடுப்பூசி செலுத்திக் கொண்ட 150 பேருக்கு ஊராட்சித் தலைவர் சரவணன் தலா ரூ. 200 ஊக்கத் தொகை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X