ஏட்டு மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்| Dinamalar

ஏட்டு மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

Added : செப் 14, 2021
புதுச்சேரி : போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சென்ற பெண்ணை, ஆயில் மசாஜ் செய்ய ஏட்டு அழைத்தது தொடர்பான வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது.லாஸ்பேட்டையை சேர்ந்த 34 வயது பெண், தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாக, லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஆக., 9ம் தேதி புகார் அளிக்க சென்றார்.புகார் குறித்த விபரங்களை கேட்ட ஏட்டு சண்முகம், அப்பெண்ணை ஆயில் மசாஜ் செய்ய அழைத்தார்.

புதுச்சேரி : போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சென்ற பெண்ணை, ஆயில் மசாஜ் செய்ய ஏட்டு அழைத்தது தொடர்பான வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது.



லாஸ்பேட்டையை சேர்ந்த 34 வயது பெண், தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாக, லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஆக., 9ம் தேதி புகார் அளிக்க சென்றார்.புகார் குறித்த விபரங்களை கேட்ட ஏட்டு சண்முகம், அப்பெண்ணை ஆயில் மசாஜ் செய்ய அழைத்தார். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து, ஏட்டு சண்முகம் 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டார்.லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, ஏட்டு சண்முகத்தை கைது செய்தனர்.ஏட்டு சண்முகம் மீது துறை ரீதியான விசாரணை அண்மையில் முடிந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.குற்றம் நடந்த இடமாக கூறப்படும் லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் போலீசாரே, இந்த புகாரை விசாரிப்பது பொருத்தமாக இருக்காது என்பதால், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், லாஸ்பேட்டை போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் கேட்டுள்ளனர்.ஆவணங்கள் கிடைத்தும் விசாரணையை துரிதப்படுத்தி முடிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X