பொது செய்தி

இந்தியா

தனியார் ஆம்புலன்சை கண்டித்து போராட்டம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : இறந்தவர் உடலை கொண்டு செல்ல, தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் அதிக வாடகை கேட்டதால், உறவினர்கள் மருத்துவமனை எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி, சாமிப்பிள்ளை தோட்டம் 8வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன், 54; சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு நேற்று மாலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை

புதுச்சேரி : இறந்தவர் உடலை கொண்டு செல்ல, தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் அதிக வாடகை கேட்டதால், உறவினர்கள் மருத்துவமனை எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, சாமிப்பிள்ளை தோட்டம் 8வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன், 54; சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு நேற்று மாலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் இறந்தார்.அவரது உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல, தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் அதிக வாடகை கேட்டுள்ளார். இதனால், லட்சுமணன் மனைவி லட்சுமி மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், லட்சுமி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது.தொடர்ந்து, லட்சுமி தரப்பினர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு சட்டசபை வளாகம் எதிரே வந்து அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியக்கடை போலீசார் வந்து, பேச்சுவார்த்தை நடத்த, ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X