சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழ வியாபாரிகளிடையே மோதல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் சன்னதிவீதியில் தள்ளு வண்டி பழ வியாபாரிகளிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கடைகளை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் நகரில் தள்ளு வண்டிகளில் பழம், பூ, காய்கறி உள்ளிட்ட பொருட்களை சிறு வியாபாரிகள் விற்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதால்

விருத்தாசலம் : விருத்தாசலம் சன்னதிவீதியில் தள்ளு வண்டி பழ வியாபாரிகளிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கடைகளை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் நகரில் தள்ளு வண்டிகளில் பழம், பூ, காய்கறி உள்ளிட்ட பொருட்களை சிறு வியாபாரிகள் விற்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதால் தள்ளுவண்டிகளை அகற்ற போலீசார் களமிறங்கினர். வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் என கோரிக்கை விடுத்ததால், அவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.அதில், விருத்தகிரீஸ்வரர் கோவில் செல்லும் சன்னதிவீதி முகப்பில் தள்ளுவண்டிகளில் பழங்கள் விற்பது தொடர்பாக, வியாபாரிகளிடையே பிரச்னை ஏற்பட்டது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் இருதரப்பு ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆதி, முருகன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று பகல் 11:00 மணியளவில், பழங்கள் விற்கும் தள்ளுவண்டிகளை அகற்ற முயன்றனர். அப்போது, பிரச்னை இல்லாமல் சுமுகமாக வியாபாரம் செய்வது, போக்குவரத்துக்கு இடையூறான முகப்பு கடையை தாங்களாகவே அகற்றிக் கொள்வது என வியாபாரிகள் கூறினர். ஆனால் உயரதிகாரிகளை சந்தித்து முறையிடுங்கள். இரவுக்குள் கடைகளை அகற்ற வேண்டுமென போலீசார் எச்சரித்து திரும்பினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X