பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக பணிகளில் முறைகேடு

Added : செப் 14, 2021
Share
Advertisement
பண்ருட்டி : ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளில் முறைகேடு நடப்பதாக அண்ணாகிராமம் ஒன்றிய குழு கூட்டத்தில் துணை சேர்மன் புகார் தெரிவித்தார்.அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் இயல்புக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் ஜானகிராமன் தலைமை தாங்கினார்.பி.டி.ஓ.க்கள் சித்ரா, சங்கர் முன்னிலை வகித்தார். ஒன்றிய மேலாளர் சுடர்வேல்மூர்த்தி
 ஊரக பணிகளில் முறைகேடு

பண்ருட்டி : ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளில் முறைகேடு நடப்பதாக அண்ணாகிராமம் ஒன்றிய குழு கூட்டத்தில் துணை சேர்மன் புகார் தெரிவித்தார்.

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் இயல்புக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் ஜானகிராமன் தலைமை தாங்கினார்.பி.டி.ஓ.க்கள் சித்ரா, சங்கர் முன்னிலை வகித்தார். ஒன்றிய மேலாளர் சுடர்வேல்மூர்த்தி தீர்மானத்தை படித்தார்.கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் குமரகுரு பேசுகையில், ஒன்றிய நிதியில் இருந்து பிளீச்சிங் பவுடர் வாங்கி ஊராட்சிக்கு வழங்குகின்றீர்கள். ஊராட்சியிலும் பிளீச்சீங் பவுடர் வாங்கி பில் எழுதுகின்றனர். இது குறித்து கேட்டால் திட்ட பி.டி.ஓ., பதில் கூறுவதில்லை என்றார். ஊராட்சி கணக்கு தணிக்கை செய்யப்படும். கணக்கு எழுதியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் ஜானகிராமன் பதிலளித்தார்.ஒன்றிய துணை சேர்மன் ஜான்சி ராணி (தே.மு.தி.க) பேசுகையில், ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கார்டுகள் கூடுதலாக போட்டு முறைகேடு நடக்கிறது. மாளிகைமேடு ஊராட்சியில் குடிநீர் இணைப்பிற்கு ரூ. 300 பெறுகின்றனர்.ஒன்றிய பொது நிதியில் திட்டமிட்டு பணி ஒதுக்கிய பின், அதை நிறுத்த ஊராட்சி தலைவருக்கு அதிகாரம் உள்ளதா என்றார். இதற்கு பதிலளித்த பி.டி.ஓ. சங்கர் தலைவருக்கு அதிகாரமில்லை, ஊரக வேலை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.கவுன்சிலர் ஜெயசந்திரன் பேசுகையில், ஒன்றிய நிதியில் தீர்மானிக்கப்பட்ட பணிகள் மாற்றி 3 மாதங்களுக்கு மேலாகியும் உத்தரவு வழங்கவில்லை என்றார். தி.மு.க., கவுன்சிலர் பர்வதம் வெங்கட்ராமன் பேசுகையில், கணிசப்பாக்கம் பழைய காலனி பகுதியில் கூடுதல் குடிநீர் போர்வெல் போட வேண்டும் என்றார். வி.சி., கவுன்சிலர் அருள் பேசுகையில், ஒன்றிய கவுன்சிலருக்கு ஊராட்சி விழாவிற்கு அழைப்பு விடுக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X