பொது செய்தி

தமிழ்நாடு

200 மாணவர்கள் பயணிக்க ஒரே பஸ்: போராடும் அவலம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகே 200 மாணவர்கள் பயணிக்க ஒரே பஸ் இயக்கப்படுவதால்,இடம் பிடிக்க போராடும் நிலையில் மாணவர்கள் உள்ளனர்.இவ்வொன்றியத்தில் கட்டுக்குடிப்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.பள்ளி அருகே கேசம்பட்டி விலக்கில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து மாணவர்கள் பஸ்
 200 மாணவர்கள் பயணிக்க  ஒரே பஸ்: போராடும் அவலம்

எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகே 200 மாணவர்கள் பயணிக்க ஒரே பஸ் இயக்கப்படுவதால்,இடம் பிடிக்க போராடும் நிலையில் மாணவர்கள் உள்ளனர்.

இவ்வொன்றியத்தில் கட்டுக்குடிப்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.பள்ளி அருகே கேசம்பட்டி விலக்கில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து மாணவர்கள் பஸ் ஏறுவது வழக்கம்.பள்ளி விடும் நேரத்தில் ஒரு பஸ் மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே பேருந்தில் முண்டியடித்து ஏறி பயணிக்கின்றனர்.

இடம் கிடைக்காதவர்கள் 5 கி.மீ., நடந்து சென்று வேறு பஸ் மூலமாக மாறி செல்கின்றனர். அதேபோல் பள்ளி துவங்கும் நேரத்தின் போதும் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பல மாணவர்கள் டூவீலர், நான்கு சக்கர வாகனங்களில் லிப்ட் கேட்டு ஆபத்தான முறையில் பள்ளிக்கு வருகின்றனர்.

எனவே பள்ளி துவங்கும், முடியும் நேரங்களில் இப்பள்ளி வழியாக கூடுதல் பஸ்களை இயக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கே.ராஜேந்திரன், கேசம்பட்டி: இவ்வழியாக இயக்கப்பட்ட காரைக்குடி துவரங்குறிச்சி பஸ் சரிவர வருவதில்லை. காலையிலும் மாலையிலும் மாணவர்கள் படும் அவதியை சொல்ல முடியவில்லை.

பஸ்சில் இடம் பிடிக்க மாணவர்கள் ஓடி அலைவது பரிதாபமாக உள்ளது. பலர் இடம் கிடைக்காமல் நடந்து சென்று இருட்டிய பிறகே வீடுகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X