மூன்றாவது டோஸ் தடுப்பு மருந்து தேவையில்லை- பிரஞ்சு விஞ்ஞானிகள் ஆய்வு முடிவு

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பாரிஸ்: உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் குறைந்துள்ளது.இதற்கு முக்கியக் காரணம் துரிதமான தடுப்பு மருந்து விநியோகம்தான். இரண்டு டோஸ் தடுப்பு மருந்துகளுடன் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்துவது பாதுகாப்பானது என்று உலக விஞ்ஞானிகள் பலர்

பாரிஸ்: உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் குறைந்துள்ளது.



latest tamil news


இதற்கு முக்கியக் காரணம் துரிதமான தடுப்பு மருந்து விநியோகம்தான். இரண்டு டோஸ் தடுப்பு மருந்துகளுடன் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்துவது பாதுகாப்பானது என்று உலக விஞ்ஞானிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கு மாற்று கருத்தும் அவ்வப்போது எழுவதை மறுக்க முடியாது.

தற்போது ஒரு ஆய்வில் மூன்றாவது டோஸ் தடுப்பு மருந்து தேவை இல்லை என்று தெரியவந்துள்ளது. லான்செட் இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரயேஸஸ் முன்னதாக மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பு மருந்தை இந்த ஆண்டு இறுதிவரை எந்த நாடும் தங்கள் குடிமக்களுக்கு செலுத்த வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார்.


latest tamil news


உலகின் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு குறைந்தபட்சம் 10 சதவீத தடுப்புமருந்து கிடைத்ததும் மூன்றாவது டோஸ் குறித்து ஆலோசிக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை வழிமொழியும் வகையில் தற்போது பிரான்ஸ் விஞ்ஞானிகளும் தங்கள் ஆய்வின் மூலமாக கருத்து ஒன்றை கூறியுள்ளனர். கொரோனா பல்வேறு மாதிரியாக உருமாறும் நிலையில் மூன்றாவது மூன்றாவது டோஸ் செலுத்துவதால் பயனில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
14-செப்-202113:06:28 IST Report Abuse
S.Baliah Seer இருக்கும் வைரசுக்கு ஒரு மருந்தும் இல்லை.இல்லாத கொரோனாவுக்கு ஏகப்பட்ட தடுப்பூசிகள்.இந்த விஞ்ஞானிகளின் தொல்லை தாங்க முடியலப்பா.இவர்களெல்லாம் முதலாளிகளின் கைப்பாவைகள்.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-செப்-202105:41:41 IST Report Abuse
மதுரை விருமாண்டி இவங்க ஸ்பான்சர் வேக்சின் விக்கல்லை. அவங்க மாஸ்க்கில் ஆரம்பிச்சு கிளவுஸ், பிபிஈ, ஆஸ்பத்திரி உபகரணங்கள் விக்கிறாங்க. சோழியன் குடுமி மட்டும் இல்லை, எல்லா குடுமி ஆடுறதுக்கும் ஏதாவது ஒரு காரணம் உண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X