தமிழ்நாடு

சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு.. முதுநகரில் அடிக்கடி விபத்தால் மக்கள் அச்சம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் முதுநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதால் மக்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்ட தலைநகரான கடலுாரில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் துறை அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. நகை, துணிக்கடைகள், மார்க்கெட்டுகள் என, வியாபார
 சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு.. முதுநகரில் அடிக்கடி விபத்தால் மக்கள் அச்சம்

கடலுார் : கடலுார் முதுநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதால் மக்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்ட தலைநகரான கடலுாரில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் துறை அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. நகை, துணிக்கடைகள், மார்க்கெட்டுகள் என, வியாபார நிறுவனங்கள் அதிகம் இருப்பதாலும் கடலுார் சுற்றுப்பகுதி மக்கள் பொருட்கள் வாங்க வருகின்றனர். இதனால் கடலுாரில் முக்கிய சாலைகளான நேதாஜி சாலை, பாரதி ரோடு, லாரன்ஸ் ரோடு ஆகியன எப்போதும் போக்குவரத்து நெரிசலாகவே உள்ளது.

மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றியும் நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. வர்த்தக நிறுவனங்கள் நிறைந்துள்ளதால் திருப்பாதிரிபுலியூர் லாரன்ஸ் ரோட்டில் வாகன நிறுத்தம் உள்ளிட்ட பிரச்னை பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. காரணம் என்ன?விஸ்தாரமாக சாலை வசதி இல்லாதது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், இருக்கும் சாலைகளில் ஆக்கரிமிப்பு, நடைபாதை ஆக்கிரமிப்பு, வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவது, போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடலுார் முக்கிய சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்களும் அடிக்கடி நடக்கிறது.முதுநகரில் உச்சம்கடலுார் மார்க்கமிருந்து திருச்சி, சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் முதுநகரை கடப்பதற்கே போதும் போதும் என்றாகி விடுகிறது.

சாலைகள் ஆக்கிரமிப்புகளால் குறுகியதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தவிப்பதுடன், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 9ம் தேதி, தாயுடன் மொபட்டில் சென்ற பள்ளி சிறுவன், லாரி சக்கரத்தில் சிக்கி இறந்த கோர சம்பவம் நடந்தது. முதுநகரில் தொடரும் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணவும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளின் இரு புறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதை தடுக்க காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X