பொது செய்தி

தமிழ்நாடு

கறவை மாடுகளை தாக்கும் புதுவித நோயால் அச்சம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்புவனம், : திருப்புவனம் வட்டாரத்தில் கறவை மாடுகளை தாக்கும் புதுவித நோயால் கால்நடை வளர்ப்போர் அச்சத்தில் உள்ளனர்.திருப்புவனம் வட்டாரத்தில் ஏனாதி, தேளி,மணல்மேடு, பெத்தானேந்தல், வில்லியரேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறவை மாடுகள் உள்ளன. விவசாயம் இல்லாததால் கிராமமக்கள் கறவைமாடுகளை நம்பியே உள்ளனர்.கறவை மாடுகள் பலவும் கன்று பிறந்த பின் நிற்க


திருப்புவனம், : திருப்புவனம் வட்டாரத்தில் கறவை மாடுகளை தாக்கும் புதுவித நோயால் கால்நடை வளர்ப்போர் அச்சத்தில் உள்ளனர்.

திருப்புவனம் வட்டாரத்தில் ஏனாதி, தேளி,மணல்மேடு, பெத்தானேந்தல், வில்லியரேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறவை மாடுகள் உள்ளன. விவசாயம் இல்லாததால் கிராமமக்கள் கறவைமாடுகளை நம்பியே உள்ளனர்.கறவை மாடுகள் பலவும் கன்று பிறந்த பின் நிற்க முடியாமல் தடுமாறி வருகின்றன.

படுத்தால் எழ முடியாமல் இருப்பதுடன் நீண்ட நேரம்நிற்க முடியாததால் தீவனம் சரியாக உட்கொள்ள முடியாமல் உள்ளன. மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் மாடுகளால் நிற்க முடியாததால் கிராமங்களில்மரங்களில் மாடுகளுக்கு தொட்டில் போன்று கட்டி தொங்க விட்டுள்ளனர்.

ஏனாதி கருப்புச்சாமி கூறுகையில்; தனியார் மருத்துவர்களிடம் ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து மாடுகளை காப்பாற்ற போராடி வருகிறோம், 45 ஆயிரம் செலவு செய்தும் வாங்கிய மாடுகள் படுத்தபடுக்கையாக இருப்பதால் திகைத்து வருகிறோம், என்றார்.சந்திரா கூறுகையில்: சிவகங்கையில் இருந்து நடமாடும் கால்நடை மருத்துவர்கள் வந்து சிகிச்சையளித்தும் மாடுகளுக்கு குணமாகவில்லை, விவசாயமும் இல்லை, மேய்ச்சல்நிலங்களில் புற்களும் இல்லாததால்தீவனத்திற்கே அதிகம் செலவிட வேண்டியுள்ளது, என்றார்.

கால்நடை மருத்துவர்கள் கூறுகையில்: கறவை மாடுகள் முதல் கன்று பிறக்கும்போது, எந்த பிரச்னையும் இருக்காது, 2வது 3வது கன்று பிறக்கும் போது இந்த மாதிரி பிரச்னை வரும். இதற்கு மாடு சினையாகஇருக்கும்போதே போதிய ஊட்டச்சத்துகள் தடுப்பு மருந்து வழங்கி இருந்தால் மாடுகளுக்கு எந்த பிரச்னையும் வராது.மாடுகளுக்கு கால்சியம் சத்து குறைபாடுகாரணமாக மாடுகள் நிற்க முடியாமல் பிரச்னை வரும், மாடுகள் வளர்ப்பவர்கள் போதியஊட்டச்சத்து, தீவனங்களை மாடு சினையாக இருக்கும் போதே வழங்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X