சிறுமியிடம் ஆபாச பேச்சு மர்ம ஆசாமிக்கு வலை

Added : செப் 14, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : நான்காம் வகுப்பு பயிலும் 9 வயது சிறுமியிடம் மொபைல் போனில் ஆபாசமாக பேசியவரை போலீசார் தேடி வருகின்றனர்.தேங்காய்த்திட்டை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக, மொபைல் போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகிறார்.சிறுமியின் மொபைல்போனுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்பு

அரியாங்குப்பம் : நான்காம் வகுப்பு பயிலும் 9 வயது சிறுமியிடம் மொபைல் போனில் ஆபாசமாக பேசியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேங்காய்த்திட்டை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக, மொபைல் போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகிறார்.சிறுமியின் மொபைல்போனுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, ஆபாசமாக பேசியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி, தாயாரிடம் மொபைல்போனை கொடுத்தார்.அந்த நபர், சிறுமியின் தாயிடம், பாலியல் தொடர்பாக ஆபாசமாக பேசினார்.ஆத்திரமடைந்த அவர், மர்ம நபரை கண்டித்துவிட்டு, இணைப்பை துண்டித்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X