பொது செய்தி

தமிழ்நாடு

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார், திருப்பாதிரிபுலியூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நேற்று நடந்தது. முதற்கட்டமாக 13ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும், 2ம் கட்டமாக 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கும் முகாமை கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் கிராமப் புறங்களில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 526 குழந்தைகள், நகர் புறங்களில்
 குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

கடலுார் : கடலுார், திருப்பாதிரிபுலியூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நேற்று நடந்தது.

முதற்கட்டமாக 13ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும், 2ம் கட்டமாக 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கும் முகாமை கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் கிராமப் புறங்களில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 526 குழந்தைகள், நகர் புறங்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 258 குழந்தைகள் உட்பட 6 லட்சத்து 884 குழந்தைகள் மற்றும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 699 பெண்கள் பயனடைய உள்ளனர். இச்சிறப்பு முகாமில் 1 முதல் 19 வயதிலான அனைத்து குழந்தைகள், 20 முதல் 30 வயதிலான பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பென்டசோல்) ஒரே நாளில் அங்கன்வாடி மையங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இக்குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

1 முதல் 2 வயது வரை அரை மாத்திரையும், 2 முதல் 30 வயது வரை 1 மாத்திரையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்கன்வாடி பணியாளர்களும் வீடுவீடாக சென்று குழந்தைகளை மையத்திற்கு வரவழைத்து மாத்திரை வழங்குகின்றனர். குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகையை தடுத்து, குழந்தையின் ஆரோக்கியம் மேம்பட்டு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித் திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரம்) மீரா, பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா, மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி நகர்நல அலுவலர் அரவிந்த் ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X