பொது செய்தி

தமிழ்நாடு

முழுமைபெறாத இ 3 ரோடு; நெரிசலுக்கு வழி தரும் நகராட்சி

Added : செப் 14, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் இ 3 ரோடு முழுமைபெறாத நிலையில்,நகராட்சி நிர்வாகமும் மெத்தன போக்கை கடைப்பிடிப்பதால் ,நகர் மக்கள் நெரிசலுக்கு ஆளாகும் நிலை தொடர்கிறது.அருப்புக்கோட்டை நகர் பகுதியில் குறுகலான அமைப்பிலே ரோடுகள் உள்ளன. அனைத்து ஊர்களுக்கும் செல்லும் பஸ்கள் , பிற வாகனங்கள் நகரின் வழியாக தான் வந்து செல்கின்றன. கடைக்காரர்கள், சாலை வியாபாரிகள்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் இ 3 ரோடு முழுமைபெறாத நிலையில்,நகராட்சி நிர்வாகமும் மெத்தன போக்கை கடைப்பிடிப்பதால் ,நகர் மக்கள் நெரிசலுக்கு ஆளாகும் நிலை தொடர்கிறது.

அருப்புக்கோட்டை நகர் பகுதியில் குறுகலான அமைப்பிலே ரோடுகள் உள்ளன. அனைத்து ஊர்களுக்கும் செல்லும் பஸ்கள் , பிற வாகனங்கள் நகரின் வழியாக தான் வந்து செல்கின்றன. கடைக்காரர்கள், சாலை வியாபாரிகள் ஆக்கிரமிப்பால் ரோடுகள் மேலும் குறுகலாக மாறி விட்டன. இதனால் காலை , மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லுாரி நேரங்களில் நேரத்திற்கு மாணவர்களால் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாளுக்குநாள் இருசக்கர வாகன எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்வதால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.நெரிசலை கட்டுப்படுத்த முடியாது போக்குவரத்து போலீசாரும் திணறுகின்றனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் 10 ஆண்டுகளுக்கு முன்பு நகரில் இ 3 ரோடு திட்டம் நகராட்சி மூலம் கொண்டு வர திட்டமிடப்பட்டது.

புதிய பஸ் ஸ்டாண்டின் அருகிலிருந்து ரயில்வே பீடர் ரோடு வழியாக டி.ஆர்.வி., சாலை, எஸ்.பி.கே. கல்லுாரி சாலை வழியாக மதுரை- துாத்துக்குடி நான்குவழிச்சாலை ரோட்டில் செல்லாம். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். நகரின் பஜார் பகுதி வழியாக ஒட்டு மொத்த வாகனங்கள் வந்து செல்ல வேண்டியது இல்லை.இத் திட்டத்தின் ஒரு பகுதியாக டி.ஆர்.வி., சாலை-கல்லுாரி சாலை வரை 40 அடி ரோடு புதியதாக அமைக்கப்பட்டது.

புதிய பஸ் ஸ்டாண்ட்-ரயில்வே பீடர் ரோடு வரை நகராட்சி நிலம் கையகப்படுத்தி உள்ளது. இவற்றை வரன்முறை செய்து மீதமுள்ள பணிகளை செய்வதில் நகராட்சி மெத்தனம் காட்டுகிறது.அரசியலும் இதில் புகுவதால் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. 10 ஆண்டாகியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதில் டி.ஆர்.வி. சாலையில் அமைக்கப்பட்ட ரோடு பெயர்ந்து 2ம் முறையாக போடப்பட்டுள்ளது.

போட்ட ரோட்டிற்கே ரூ.கோடிக் கணக்கில் நிதியை செலவழிக்கின்றரே தவிர, மீதமுள்ளபகுதியிலும் ரோடு அமைத்து இ 3 ரோட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி மெத்தனம் காட்டுகிறது. இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.இதற்கு ஓர் தீர்வு காண மாவட்ட நிர்வாகம்தான் சற்று முனைப்பு காட்ட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X