பொது செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்பனைக்கு முற்றுப்புள்ளி; விருந்தாசலம் ஏ.எஸ்.பி., உறுதி

Added : செப் 14, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற ஏ.எஸ்.பி., அங்கித் ஜெயின் தெரிவித்தார்.விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆக பணிபுரிந்த மோகன் சென்னை சிலை தடுப்பு பிரிவு உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, விருத்தாசலம் ஏ.எஸ்.பி., யாக அங்கித் ஜெயின் நேற்று பொறுப்பேற்றார். உத்திரப்பிரதேச மாநிலம், நொய்டா
 கஞ்சா விற்பனைக்கு முற்றுப்புள்ளி;  விருந்தாசலம் ஏ.எஸ்.பி., உறுதி

விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற ஏ.எஸ்.பி., அங்கித் ஜெயின் தெரிவித்தார்.

விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆக பணிபுரிந்த மோகன் சென்னை சிலை தடுப்பு பிரிவு உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, விருத்தாசலம் ஏ.எஸ்.பி., யாக அங்கித் ஜெயின் நேற்று பொறுப்பேற்றார். உத்திரப்பிரதேச மாநிலம், நொய்டா பகுதியை சேர்ந்த இவர் 2018ம் ஆண்டு, ஐ.பி.எஸ்., முடித்தார். பின்னர், பண்ருட்டி உட்கோட்டத்தில் பயிற்சி பெற்ற இவர், விருத்தாசலம் கோட்ட ஏ.எஸ்.பி., ஆக நேற்று பொறுப்பேற்றார். பின் அவர் கூறுகையில், விருத்தாசலம் பகுதியில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் விரைந்து முடிக்கப்படும். கஞ்சா விற்பனை மற்றும் போக்குவரத்து நெரிசல் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். புதிதாக பொறுப்பேற்ற அவருக்கு, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X