நான்கு வழிச்சாலையில் மேயும் மாடுகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு வழிச்சாலையில் மேயும் மாடுகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

Added : செப் 14, 2021
Share
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் புற்களை மேயும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.உளுந்துார்பேட்டை - சேலம் நான்கு வழிச்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. சாலையின் நடுவே சென்டர் மீடியனில் செடிகள் வளர்க்கப்படுகிறது.இரவு நேரங்களில் கனரக வாகனங்களின் முகப்பு விளக்குகள் வாகன
 நான்கு வழிச்சாலையில் மேயும் மாடுகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் புற்களை மேயும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

உளுந்துார்பேட்டை - சேலம் நான்கு வழிச்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. சாலையின் நடுவே சென்டர் மீடியனில் செடிகள் வளர்க்கப்படுகிறது.இரவு நேரங்களில் கனரக வாகனங்களின் முகப்பு விளக்குகள் வாகன ஓட்டிகளுக்கு கண்கள் கூசாமல் இருக்கவும், வாகன புகை நச்சினை கட்டுபடுத்துவும் பல வண்ண அரளிச் செடிகளும்வளர்க்கப்படுகிறது. இச்செடிகளுடன் தற்போது அதிகளவில் புற்களும் வளர்ந்து புதர்கள் போல் காணப்படுகிறது.இதனால், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்களது மாடுகளைசாலையின் நடுவே மேய்ச்சலுக்கு கட்டிவிட்டுச் செல்கின்றனர்.சாலையின் செல்லும் வாகனங்கள் 'ஹாரன்' சத்தம் கேட்டு மிரண்டு ஓடினால் விபத்துகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.எனவே, நான்கு வழிச்சாலையில் சென்டர் மீடியனில் மேய்ச்சலுக்கு விடுக்கும், கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X