தமிழ்நாடு

இதையும் பாருங்க சார்! ஆட்டோ, கார் ஸ்டாண்ட்களில் இல்லை கட்டண பலகை ; மீட்டர்கள் பொருத்தாமல் இஷட்டத்திற்கு கட்டணம் வசூல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் இயக்கப்படும் வாடகை, ஆட்டோ, கார், வேன், ஸ்டாண்ட்களில் கட்டண தொகை குறித்த விளம்பர பலகை வைக்கப்படாததோடு, மீட்டர்கள் பொருத்தாமல் இஷட்டத்திற்கு கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் பாதிக்கின்றனர்.மாவட்டம் கிராமங்கள் நிறைந்த மாவட்டம் . ஆன்மிக தலங்களும் அதிகம் உள்ளது. நாள்தோறும் பயணம் மேற்கொள்பவர்களும் அதிகம்.வாடகை கார் ,வேன் ,ஆட்டோ , மூலம்

சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் இயக்கப்படும் வாடகை, ஆட்டோ, கார், வேன், ஸ்டாண்ட்களில் கட்டண தொகை குறித்த விளம்பர பலகை வைக்கப்படாததோடு, மீட்டர்கள் பொருத்தாமல் இஷட்டத்திற்கு கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் பாதிக்கின்றனர்.

மாவட்டம் கிராமங்கள் நிறைந்த மாவட்டம் . ஆன்மிக தலங்களும் அதிகம் உள்ளது. நாள்தோறும் பயணம் மேற்கொள்பவர்களும் அதிகம்.வாடகை கார் ,வேன் ,ஆட்டோ , மூலம் பலர் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். மாவட்டத்தில் நகர் புறங்களில் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் அதிகளவில் ஆட்டோ ,கார் ,வேன்கள் இயக்கப்படுகின்றது. வாடகை ஆட்டோ ,கார்கள் எதிலும் மீட்டர்கள் இல்லை.

குறிப்பிட்ட துாரத்திற்கு இவ்வளவுதான் கட்டணம் என்பன குறித்த கட்டண பட்டியல் அடங்கிய விளம்பர பலகைகள் எங்குமே வைக்கப்படவில்லை . ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தப்படும் வண்டி விபரம் , டிரைவர் பெயர்களும் அந்தந்த பகுதி ஆட்டோ ஸ்டாண்ட்களின் விளம்பர பலகையில் இடம் பெறுவது அவசியமாகும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என காரணம் கூறி குறைந்தபட்ச கட்டணத்தை சப்தமின்றி பலர் உயர்த்தி உள்ளனர். இதனால் பஸ் இயக்கப்படாத நேரங்களில் நடுத்தர மக்கள் ஆட்டோ ,கார்,வேன் இயக்குபவர்கள் கூறும் கட்டணத்தையே கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

நடுத்தர வர்க்கத்தினர் கட்டண உயர்வால் பாதிக்கின்றனர். அந்தந்த பகுதியில் உள்ள சங்க தலைவர்களுடன் வட்டாரபோக்குவரத்து அதிகாரிகள் கலந்து பேசி குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்து, பொதுமக்கள் பார்வைக்கு தெரியும் வகையில் கட்டண பலகை வைக்க வேண்டும்....


இரவு நேரங்களில் கூடுதல் கட்டணம்


எந்த ஆட்டோக்களிலும் மீட்டர்களில் இல்லை .வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு எப்.சி. ,எடுக்கச் செல்லும்போது மட்டுமே ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துகின்றனர். அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தவுடன் கழற்றிவிடுகின்றனர். கி.மீ., இவ்வளவு தான் என்று தெளிவாக பயணிகளுக்கு தெரிவித்து விட்டால், டிரைவர்களுடன் வீண் வாக்குவாதத்தில் பயணிகள் ஈடுபடுவதும் குறையும்.

வாடகை கார், வேன், ஆட்டோ ஓட்டுபவர்களும் டீசல் விலை உயர்வை பொறுத்து கட்டடணத்தை உயர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிக்கொள்ளலாம். இரவு நேரத்தில் தற்போது கிராமங்களுக்கு செல்ல குறைந்த பட்ச கட்டணமே ரூ. 300 ஆக உள்ளது. மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முத்துக்குமார், சமூக ஆர்வலர், சாத்துார்...............

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X