பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு

Added : செப் 14, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது.கல்லுாரி முதல்வர் மோகன்தாஸ் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாளை 15 மற்றும் 16ம் தேதிகளில் மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. நாளை 15ம் தேதி தமிழ், ஆங்கிலம், வணிகவியல் துறைக்கும், 16ம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது.

கல்லுாரி முதல்வர் மோகன்தாஸ் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாளை 15 மற்றும் 16ம் தேதிகளில் மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. நாளை 15ம் தேதி தமிழ், ஆங்கிலம், வணிகவியல் துறைக்கும், 16ம் தேதி கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல் துறைகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.இதில், முதல் இரண்டு கட்ட கலந்தாய்வில் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கலந்தாய்விற்கு எஸ்.எம்.எஸ்., இ-மெயில் அழைப்பு வந்தவர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும்.இதனைத் தொடர்ந்து வரும் 17ம் தேதி முதுகலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும். அனைத்து மாணவர்களும், பெற்றோர்களும் முககவசம் அணிந்து வர வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X