தமிழ்நாடு

4 தொகுதிகளின் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல்... வெளியீடு; 25ம் தேதிக்குள் முறையீடுகளை தெரிவிக்கலாம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளின் வரைவு ஓட்டுச்சாவடி மையங்களின் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் தங்களது முறையீடுகளை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய 4
4 தொகுதிகளின் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல்... வெளியீடு; 25ம் தேதிக்குள் முறையீடுகளை தெரிவிக்கலாம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளின் வரைவு ஓட்டுச்சாவடி மையங்களின் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் தங்களது முறையீடுகளை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகளுக்கு வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 5 ம் தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது

.இதில், பட்டியலில் விடுபட்ட, தவறான, இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம், திருத்தம் செய்யவும், 18 வயது பூர்த்தியான இளம் வாக்காளர்களின் பெயர் சேர்க்கவும், ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள குறைபாடுகளைப் போக்கும் வகையிலான கால அட்டவணை பட்டியல் வெளியிடப்பட்டது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி வரைவு ஓட்டுச்சாவடி மைய பட்டியலை வெளியிட்டார்.அதில், உளுந்துார்பேட்டை 337, ரிஷிவந்தியம், 305, சங்கராபுரம், 300, கள்ளக்குறிச்சி (தனி) 330 என மொத்தம் 1,272 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன.இவ்வரைவு ஓட்டுச்சாவடி மையங்களின் பட்டியல் கலெக்டர் அலுவலகம், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வரைவு ஓட்டுச்சாவடி மையங்களின் பட்டியல் வழங்கப்படவுள்ளது.ஓட்டுச்சாவடி மையங்கள் மறுவரையறை செய்திட, வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் மாறுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டி மையங்களின் விபரங்கள் தயார் செய்யப்படவுள்ளன. இதில், ஓட்டுச்சாவடி மையங்களின் பெயர் மற்றும் இடம் மாற்றம், புதியதாக உருவாக்குதல், இணைத்தல், மாறுதல் மற்றும் 1,500 வாக்காளர்களுக்கு அதிகமாகவும், வாக்காளர் இருப்பிடத்திலிருந்து 2.கி.மீ., துாரத்திற்கு அதிகமாகவும் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களைப் பிரித்து புதியதாக உருவாக்கப்படுகிறது.எனவே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் தங்களது முறையீடுகள், கோரிக்கையை வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கலாம்.நுாறு சதவீதம் முழுமையான, சரியான ஓட்டுச்சாவடி மையங்கள் அமைத்திட உதவிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.மேலும், வரும் 30ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் இருமுறை பதிவு, பிழைகள் நீக்குதல், இறந்தவர்களின் பெயரை நீக்குதல், வாக்காளர் பட்டியல் தெருக்களின் பெயர்களை சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அக்டோபர் 5ம் தேதி வரை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடுகள்தோறும் கள ஆய்வு மேற்கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து, இறுதி ஓட்டுச் சாவடி மையங்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.டி.ஆர்.ஓ., விஜய்பாபு, ஆர்.டி.ஓ.,க்கள் கள்ளக்குறிச்சி (பொறுப்பு) சரவணன், திருக்கோவிலுார் (பொறுப்பு) ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் பாலசுப்ரமணியம், தேர்தல் தனி தாசில்தார்கள் அருள்மொழி, பசுபதி, மணி, சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X