பலாத்கார கொலையில் குற்றவாளி வாக்குமூலம்| Dinamalar

'பலாத்கார கொலையில் குற்றவாளி வாக்குமூலம்'

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (9)
Share
மும்பை-மும்பை புறநகர் பகுதியில், சமீபத்தில் டெம்போ வேனில் பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொலையான வழக்கில், கைதான குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ரேலே கூறி உள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை புறநகரில் உள்ள சகினகா பகுதியில் டெம்போ வேனில் 32 வயது பெண் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், அவரது பிறப்பு

மும்பை-மும்பை புறநகர் பகுதியில், சமீபத்தில் டெம்போ வேனில் பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொலையான வழக்கில், கைதான குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ரேலே கூறி உள்ளார்.



latest tamil news


மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை புறநகரில் உள்ள சகினகா பகுதியில் டெம்போ வேனில் 32 வயது பெண் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், அவரது பிறப்பு உறுப்பில் இரும்பு கம்பியை சொருகி சித்ரவதை செய்யப்பட்ட நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, சிகிச்சை பலனின்றி அந்த பெண் பலியான நிலையில், அப்பகுதியின் கண்காணிப்பு 'கேமரா'வை ஆய்வு செய்து உத்தர பிரதேசத்தை சேர்ந்த மோகன் சவுகான், 45, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மோகன் சவுகான் ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ரேலே நேற்று கூறியதாவது:வழக்கில் கைதான மோகன் சவுகான், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு உள்ளார். கொலையான பெண் அவருக்கு தெரிந்தவர்.இருவரும் ஒன்றாக இருந்தபோது தனக்கு சில காரியங்களை செய்து தர வேண்டும் என அப்பெண் கேட்டுள்ளார். இதனால் உருவான தகராறு கொலையாக மாறியது.


latest tamil news


வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் உட்பட வலுவான ஆதாரங்கள் உள்ளன. சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு உள்ளார். விசாரணை 15 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு, 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். மோகன் சவுகான் மீது மஹா.,வில் வேறு வழக்கு கள் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் கூறி உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X