சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர் தலைமையில் தனிப்படை போலீசார், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட்டில் சாலக்கரையைச் சேர்ந்த முருகேஷ் ராஜ்குமார், 30; என்பவரின் மளிகை கடையில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.இதில், குட்கா, பான் மசாலா பதுக்கி வைத்து விற்பது தெரிந்தது. இதையடுத்து முருகேஷ் ராஜ்குமாரையும், கடையில் பணிபுரிந்த புதுச்சேரி மாநிலம், பாகூர் அடுத்த சின்ன
  ரூ.1 லட்சம் குட்கா  பறிமுதல்

கடலுார் : கடலுார் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர் தலைமையில் தனிப்படை போலீசார், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட்டில் சாலக்கரையைச் சேர்ந்த முருகேஷ் ராஜ்குமார், 30; என்பவரின் மளிகை கடையில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், குட்கா, பான் மசாலா பதுக்கி வைத்து விற்பது தெரிந்தது. இதையடுத்து முருகேஷ் ராஜ்குமாரையும், கடையில் பணிபுரிந்த புதுச்சேரி மாநிலம், பாகூர் அடுத்த சின்ன ஆராய்ச்சிகுப்பம் ராமகிருஷ்ணன் மகன் ரஞ்சித்குமார், 19; என்பவரையும் பிடித்தனர்.பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த தேவநாதன், 42; என்பவரின் பஞ்சர் கடையில் குட்கா, பான் மசாலா விற்பது தெரிந்தது.

இவருக்கு மினி லாரியில் குட்கா விற்பனை செய்த ஆலப்பாக்கம், சிந்தாமணிக்குப்பத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள், 38; என்பவரையும் போலீசார் பிடித்தனர்.முருகேஷ் ராஜ்குமார், ரஞ்சித்குமார், தேவநாதன், அய்யம்பெருமாள் ஆகியோரை தனிப்படை போலீசார் கடலுார், முதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப் பதிந்து நால்வரையும் கைது செய்தார். இவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X