சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கம்பத்தில் பைக் மோதி அ.தி.மு.க., பிரமுகர் பலி

Added : செப் 14, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் மின் கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் அ.தி.மு.க., பிரமுகர் இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரவி. மாவட்ட ஜெ.,பேரவை இணைச் செயலாளர். இவரது மகன் அசோக்குமார், 23; அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு 6வது வார்டு செயலாளர். அசோக்குமார் நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், கல்லுாரி சாலை வழியாக பைக்கில் வீட்டிற்குச் சென்று

திண்டிவனம் : திண்டிவனத்தில் மின் கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் அ.தி.மு.க., பிரமுகர் இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரவி. மாவட்ட ஜெ.,பேரவை இணைச் செயலாளர். இவரது மகன் அசோக்குமார், 23; அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு 6வது வார்டு செயலாளர். அசோக்குமார் நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், கல்லுாரி சாலை வழியாக பைக்கில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே, எதிரே வந்த ஆட்டோ மீது பைக் உரசி, சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. பலத்த காயமடைந்த அசோக்குமார் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X