பொது செய்தி

தமிழ்நாடு

எதிர்க்கட்சி மீது அடக்குமுறை எச்.ராஜா பகிரங்க குற்றச்சாட்டு

Added : செப் 14, 2021
Share
Advertisement
கடலுார் : ''கோடநாடு விவகாரத்தில், தி.மு.க., அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்க்கட்சி மீது அடக்குமுறையை கையாள்கிறது,'' என, பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச். ராஜா கூறினார்.கடலுாரில் அவர் அளித்த பேட்டி:சேலத்தில் மாணவர் தனுஷ் தற்கொலைக்கு முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., - வி.சி.,- கம்யூ., உள்ளிட்ட இலவச இணைப்பு கட்சிகள் காரணம்.லோக்சபாவில் ஒப்புதல் அளித்து, ஜனாதிபதி
 எதிர்க்கட்சி மீது அடக்குமுறை  எச்.ராஜா பகிரங்க குற்றச்சாட்டு

கடலுார் : ''கோடநாடு விவகாரத்தில், தி.மு.க., அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்க்கட்சி மீது அடக்குமுறையை கையாள்கிறது,'' என, பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச். ராஜா கூறினார்.

கடலுாரில் அவர் அளித்த பேட்டி:சேலத்தில் மாணவர் தனுஷ் தற்கொலைக்கு முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., - வி.சி.,- கம்யூ., உள்ளிட்ட இலவச இணைப்பு கட்சிகள் காரணம்.லோக்சபாவில் ஒப்புதல் அளித்து, ஜனாதிபதி கையெழுத்திட்ட நீட் தேர்வு தீர்மானத்தை எதிர்த்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.மத்திய அரசு சட்டம் இயற்றினால் எல்லா மாநிலமும் ஏற்க வேண்டும். மத்திய அரசின் சட்டத்தை எதிர்க்க கூடாது. மக்களிடம் பிரிவினைவாத எண்ணத்தை தி.மு.க.., திணிப்பதை பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது.வருங்காலங்களில் மாணவர் தனுஷ் தற்கொலை போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, முதல்வர் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.

நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் பேசக்கூடாது.தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமித்ததை முதல்வர் ஸ்டாலின் வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், காங்., தலைவர் அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அவர் நடத்தும் கல்லுாரியில் ஏற்கனவே முறைகேடு புகார்கள் எழுந்துள்ள நிலையில், கல்லுாரி வேந்தரான புதிய கவர்னரால் பிரச்னை வருமோ என்ற எண்ணத்தில், அவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம்.கோடநாடு வழக்கு தொடர்பாக, எதிர்க்கட்சி மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடக்குமுறையை தி.மு.க., அரசு கையாள்வதாக தெரிகிறது.முதல்வர் என்பவர் பெரிய பொறுப்பில் உள்ளார். நான்கரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சி மாற்றம் வந்தால், அப்போது ஆட்சியில் அமர்பவர்களும் இதுபோன்று ஈடுபட வாய்ப்புள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X