சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி கூட்டு பலாத்காரம் 4 பேருக்கு போலீஸ் வலை.

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே 10 வயது சிறுமியை காரில் கடத்தி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை திருக்கோவிலுார் போலீசார் தேடி வருகின்றனர்..கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி. இவரது பெற்றோர் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகின்றனர். சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே 10 வயது சிறுமியை காரில் கடத்தி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை திருக்கோவிலுார் போலீசார் தேடி வருகின்றனர்..
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி. இவரது பெற்றோர் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகின்றனர். சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் உள்ளார்.கடந்த 15 நாட்களுக்கு முன் சிறுமி கடைக்குச் சென்றபோது, காட்டுப்பையூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பார்த்திபன், 25; வெங்கடேசன் மகன் பிரபா, 27; இருவரும் காரில் பின் தொடர்ந்து, நடந்து சென்ற சிறுமியின் வாயை பொத்தி, மயக்க மருந்து தடவிய கர்ச்சிப்பால் முகத்தை மூடி கடத்திச் சென்றனர்.அப்போது, காரின் பின் இருக்கையில் 2 பேர் இருந்ததை சிறுமி பார்த்துள்ளார்.

அதன் பிறகு என்ன நடந்தது என தெரியாத நிலையில், காட்டுப்பையூர் காப்புக்காட்டில் பெருமாள் கோவில் பின்புறம் ஆடைகள் கிழிக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்தவர் சிறிது நேரத்தில் எழுந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று, பெங்களூருவில் இருந்து வந்த தனது தாயிடம் சிறுமி தன்னை கடத்திச் சென்றவர்களையும், அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தது குறித்தும் கூறியுள்ளார்.இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் பார்த்திபன், பிரபா, சுப்ரமணியன் மகன் கோபி, 26; அப்பாதுரை மகன் அருள், 24; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தலைமறைவான 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X