சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐ.டி., பணியாளரைத் தாக்கிய பஸ் ஊழியர்கள் 4 பேர் கைது

Added : செப் 14, 2021
Share
Advertisement
விழுப்புரம் : ஐ.டி., நிறுவன ஊழியரைத் தாக்கிய, புதுச்சேரி தனியார் பஸ் ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம், மன்னச்சநல்லுாரைச் சேர்ந்தவர் கோபிநாத், 31; சென்னை, சோளிங்கநல்லுாரில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி தனது காரில் வந்தார். வளவனுார் அருகே, தனியார் டூரிஸ்ட் பஸ், காரை உரசுவது போல்

விழுப்புரம் : ஐ.டி., நிறுவன ஊழியரைத் தாக்கிய, புதுச்சேரி தனியார் பஸ் ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், மன்னச்சநல்லுாரைச் சேர்ந்தவர் கோபிநாத், 31; சென்னை, சோளிங்கநல்லுாரில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி தனது காரில் வந்தார். வளவனுார் அருகே, தனியார் டூரிஸ்ட் பஸ், காரை உரசுவது போல் வந்துள்ளது. அந்த, பஸ்சை மறித்து கோபிநாத் தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால், ஏற்பட்ட தகராறில் பஸ் ஊழியர்கள் புதுச்சேரி மாநிலம், திருக்கனுார் முகமது உசேன், 39; வில்லியனுார் தட்சணாமூர்த்தி, 60; வடமங்கலம் பாலமுருகன், 19; மற்றும் மதன்ராஜ், 19; ஆகியோர் கோபிநாத்தைத் திட்டித் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின்பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து முகமது உசேன் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X