சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணாடம் அருகே அடகுக்கடை உரிமையாளருக்கு கத்திக் குத்து

Added : செப் 14, 2021
Share
Advertisement
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே பட்டப்பகலில் பைக்கில் சென்ற நகை அடகுக்கடை உரிமையாளரை வழிமறித்து, கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் மாவட்டம், பெண்ணாடம், சுமைதாங்கி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 52; இவர் துறையூரில் நகை அடகுக்கடை வைத்துள்ளார். நேற்று காலை 10:15 மணியளவில் வழக்கறிஞர் ஒருவரை பார்க்க முருகன்குடி கிராமத்திற்கு பைக்கில் சென்று, மீண்டும் விருதை -

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே பட்டப்பகலில் பைக்கில் சென்ற நகை அடகுக்கடை உரிமையாளரை வழிமறித்து, கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம், சுமைதாங்கி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 52; இவர் துறையூரில் நகை அடகுக்கடை வைத்துள்ளார். நேற்று காலை 10:15 மணியளவில் வழக்கறிஞர் ஒருவரை பார்க்க முருகன்குடி கிராமத்திற்கு பைக்கில் சென்று, மீண்டும் விருதை - திட்டக்குடி சாலையில் வீட்டிற்கு வந்தார். காலை 10:45 மணியளவில் சின்னகொசப்பள்ளம் பஸ் நிறுத்தம் வந்தபோது, அவ்வழியே பைக்கில் முகக்கவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவர் அவரை வழிமறித்தனர்., உனக்கும் பெண்ணாடத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், மகேஷ்குமார் இருவருக்கும் என்ன பிரச்னை எனக்கேட்டு, கத்தியால் அவரது வயிற்று பகுதியில் குத்தி, கிழித்து விட்டு தப்பினர்.

ராஜா, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பெண்ணாடம் சதீஷ்குமார், மகேஷ்குமார் இடையே 250 சவரன் நகை, கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் முன்விரோதம் உள்ளது. எனவே தன்னை ஆட்கள் வைத்து கத்தியால் குத்தியதாக ராஜா போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜாவை கத்தியால் குத்திய மர்ம நபர்கள் யார் என விசாரிக்கின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X