சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

Added : செப் 14, 2021
Share
Advertisement
விழுப்புரம் : முதியவர் கொலை வழக்கில் 4 பேருக்கு விழுப்புரம் கோர்ட்டில் ஆயுள் தண்டனை திக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கொரட்டூரைச் சேர்ந்தவர் காசி, 60; இவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி மாரிமுத்து என்பவர், 2011 பிப்., 21ம் தேதி இறந்தார். இந்த துக்க நிகழ்ச்சிக்கு, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த உறவினர்கள் பக்கிரிசாமி, 49; இவரது

விழுப்புரம் : முதியவர் கொலை வழக்கில் 4 பேருக்கு விழுப்புரம் கோர்ட்டில் ஆயுள் தண்டனை திக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கொரட்டூரைச் சேர்ந்தவர் காசி, 60; இவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி மாரிமுத்து என்பவர், 2011 பிப்., 21ம் தேதி இறந்தார். இந்த துக்க நிகழ்ச்சிக்கு, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த உறவினர்கள் பக்கிரிசாமி, 49; இவரது தம்பிகள் பாவாடை, 42; கஜேந்திரன், 40; மற்றும் உறவினர் குபேந்திரன், 40; ஆகியோர் வந்தனர்.இறுதிச்சடங்கு செய்தபோது, காசி- பக்கிரிசாமி தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பக்கிரிசாமி உட்பட 4 பேர் தாக்கியதில், காசி சம்பவ இடத்திலேயே இறந்தார்.திருநாவலுார் போலீசார் வழக்குப்பதிந்து, பக்கிரிசாமி, பாவாடை, கஜேந்திரன், குபேந்திரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மனுதாரர் தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் (பொறுப்பு) சஞ்சய்காந்தி ஆஜரானார்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செங்கமலச்செல்வன், குற்றம் சாட்டப்பட்ட பக்கிரிசாமி உட்பட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 1,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X