சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏர்லைன்சில் வேலை தருவதாக வாலிபரிடம் ரூ.96,283 மோசடி

Added : செப் 14, 2021
Share
Advertisement
விழுப்புரம் : தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை தருவதாகக் கூறி, வாலிபரிடம் 96 ஆயிரத்து 283 ரூபாயை ஏமாற்றியது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த எம்.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் புகழேந்தி, 31; இவர், தனக்கு வேலை கேட்டு தனியார் நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலம் விண்ணப்பித்திருந்தார். கடந்த ஜூலை 7ம்

விழுப்புரம் : தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை தருவதாகக் கூறி, வாலிபரிடம் 96 ஆயிரத்து 283 ரூபாயை ஏமாற்றியது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த எம்.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் புகழேந்தி, 31; இவர், தனக்கு வேலை கேட்டு தனியார் நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலம் விண்ணப்பித்திருந்தார். கடந்த ஜூலை 7ம் தேதி புகழேந்தியை தொடர்பு கொண்ட மர்ம நபர், சென்னை தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளார்.

பின், இ-மெயில் முகவரி மூலம் அந்த நபர் நேர்காணல் கடிதம் அனுப்பினார். இப்பணியில் சேர நேர்காணல் கட்டணம், சம்பள கணக்கு துவங்க மற்றும் செக்யூரிட்டி டிபாசிட், என்.ஓ.சி., ஆகியவற்றிற்காக 96 ஆயிரத்து 283 ரூபாய் கட்ட வேண்டும் என கூறியுள்ளார்.இதையடுத்து, தனியார் ஏர்லைன்ஸ் வங்கிக் கணக்கில் 96 ஆயிரத்து 283 ரூபாயை புகழேந்தி செலுத்தினார். ஆனால், இதுவரை வேலை வழங்கவில்லை. இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X