சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வகுப்பறையில் மாணவர் மர்ம சாவு விக்கிரவாண்டி அருகே பரிதாபம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : பள்ளி மாணவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த மூங்கில்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வினாயகமூர்த்தி, 42: விவசாயி. இவரது மகன் தினேஷ், 17; வா.பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், நேற்று காலை 8:30 மணியளவில் தங்களது தோட்டத்தில் பூக்கள் பறித்துக் கொடுத்து

விக்கிரவாண்டி : பள்ளி மாணவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த மூங்கில்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வினாயகமூர்த்தி, 42: விவசாயி. இவரது மகன் தினேஷ், 17; வா.பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், நேற்று காலை 8:30 மணியளவில் தங்களது தோட்டத்தில் பூக்கள் பறித்துக் கொடுத்து விட்டு பள்ளிக்குச் சென்றுள்ளார்.

காலை 9:45 மணியளவில் தினேஷ் உடலில் திடீரென வியர்த்து கொட்டிய நிலையில், வாயில் நுரை தள்ளியுள்ளது. உடனடியாக, ஆசிரியர்கள் ராஜேஷ், ரமேஷ்குமார் ஆகியோர் பைக்கில் ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். பின், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தினேஷை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.தினேஷ் கால்கள் இரண்டும் மஞ்சளாக மாறியிருந்தது.

அவரது மரணம் குறித்த விபரம் பிரேத பரிசோதனையில் தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்தனர். பள்ளிக்கு வந்த மாணவர் திடீரென இறந்ததால் சக மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கதறி அழுதனர்.விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X