பொது செய்தி

தமிழ்நாடு

மனநலம் குன்றிய சிறுவன்

Added : செப் 14, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் திரிந்த மனநலம் குன்றிய சிறுவன் சிறப்பு பள்ளியில் ஒப்படைக்கப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், சென்னை செல்லும் சாலையில், நேற்று முன்தினம் 14 வயது சிறுவன் தனியாக சுற்றித்திரிவதாக சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்று சிறுவனை மீட்டு திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்
 மனநலம் குன்றிய சிறுவன்

திண்டிவனம் : திண்டிவனத்தில் திரிந்த மனநலம் குன்றிய சிறுவன் சிறப்பு பள்ளியில் ஒப்படைக்கப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், சென்னை செல்லும் சாலையில், நேற்று முன்தினம் 14 வயது சிறுவன் தனியாக சுற்றித்திரிவதாக சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்று சிறுவனை மீட்டு திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், சிறுவன் மனநலம் குன்றிய நிலையில் இருப்பது தெரியவந்தது. மேலும் சிறுவன் பெயர் விக்னேஷ், பெற்றோர் ஏழுமலை - மீனா, புதுச்சேரி பகுதியான கதிர்காமம், தட்டாஞ்சாவடி, கோரிமேடு, மூலகுளம் ஆகிய பகுதிகளில் மாறி, மாறி வசித்ததால், சிறுவனால் சரியான இடத்தைக் கூற முடியவில்லை.விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுமத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர் பிரேமா முன்னிலையில், திண்டிவனம் சற்குரு மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் சிறுவன் ஒப்படைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X