பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் தாமதம்; வேலைக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு குறுந்தகவல், சான்றிதழ் அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது.மானாமதுரை தாலுகா மற்றும் நகர் பகுதிகளில் உள்ள பலர் கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.மேலும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு அந்தந்த நிறுவன அதிகாரிகள் கூறி

மானாமதுரை : மானாமதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு குறுந்தகவல், சான்றிதழ் அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது.

மானாமதுரை தாலுகா மற்றும் நகர் பகுதிகளில் உள்ள பலர் கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.மேலும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு அந்தந்த நிறுவன அதிகாரிகள் கூறி வருகின்றனர்.திருப்பூர்,கோவை போன்ற நகரங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பணிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

மானாமதுரையில் கடந்த ஆகஸ்ட் இறுதியில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இதுவரை ஊசி போட்டதற்கான குறுந்தகவல், சான்றிதழ் வராததால் அவர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.சுகாதாரத்துறை ஊழியர்கள் கூறுகையில், தடுப்பூசி போட்டவர்களின் ஆதார் எண், தடுப்பூசியின் வகை, கைப்பேசி எண் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய போதிய ஊழியர்கள் இல்லாததால் இந்த நிலை நீடிக்கிறது விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம்.விரைவாக ஆதாரங்கள் தேவைப்படுவர்கள் அந்தந்த பகுதி வட்டார மருத்துவமனைக்கு நேரில் வந்து தகவல்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்,என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X