சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரசாயனம் தடவிய 1.5 டன் வாழை தார் பறிமுதல்; கோடவுனுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

Added : செப் 14, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் ரசாயனம் தெளித்து பழுக்க வைத்த 1.5 டன் வாழை தார்களை பறிமுதல் செய்து, அந்த கோடவுனுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர்.மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் அடங்கிய குழுவினர் சிவகங்கை ஆசாத் தெருவில் உள்ள ஏ.யாசர் அராபத் என்பவருக்கு சொந்தமான வாழை கோடவுனில் ரெய்டு

சிவகங்கை : சிவகங்கையில் ரசாயனம் தெளித்து பழுக்க வைத்த 1.5 டன் வாழை தார்களை பறிமுதல் செய்து, அந்த கோடவுனுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர்.

மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் அடங்கிய குழுவினர் சிவகங்கை ஆசாத் தெருவில் உள்ள ஏ.யாசர் அராபத் என்பவருக்கு சொந்தமான வாழை கோடவுனில் ரெய்டு நடத்தினர்.அக்கோடவுனில் இருந்த 1.5 டன் வாழை தார்களில் எத்தபோன்' என்ற ரசாயனம் தடவி பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து 1.5 டன் வாழை தார்களை பறிமுதல் செய்து கோடவுனுக்கு சீல் வைத்தனர். மேலும் கோடவுன் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.தொடர்ந்து வாழை பழங்களை உணவு பாதுகாப்பு துறை சோதனைக்காக அனுப்பியுள்ளனர். தொடர்ந்து இது போன்று ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்படும் வாழை பழங்களை சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதென உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X