தமிழ்நாடு

இரவு நேரங்களில் எந்ததடையுமின்றி மணல் கொள்ளை தொடர்கிறது

Added : செப் 14, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் அடுத்தவர்களின் பட்டா நிலங்களில் எந்ததடையுமின்றி மணலை கொள்ளையடித்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளையர்கள் தற்போது நுாதனமாக அடுத்தவரின் பட்டா நிலங்களில் இரவில் டிப்பர் லாரிகள், மணல் அள்ளும் இயந்திரங்கள் கொண்டு கிராவல்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் அடுத்தவர்களின் பட்டா நிலங்களில் எந்ததடையுமின்றி மணலை கொள்ளையடித்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளையர்கள் தற்போது நுாதனமாக அடுத்தவரின் பட்டா நிலங்களில் இரவில் டிப்பர் லாரிகள், மணல் அள்ளும் இயந்திரங்கள் கொண்டு கிராவல் மண்ணை கொள்ளையடித்து வருகின்றனர். சிவகங்கை புறநகர், கிராமப்புறங்களில் கிராவல் மண் குறி வைத்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

அரசு புறம்போக்கு நிலங்களில் அள்ளினால்அதிகாரிகள் அவர்களை பிடித்து அபராதம் விதிப்பர். ஆகையால்மணல் கொள்ளையர்கள் சமீப காலமாக அடுத்தவரின் பட்டா நிலத்தில் கிராவல்மண்ணை கொள்ளையடித்து செல்கின்றனர். இரவு நேரங்களில் இடத்துக்கு சொந்தக்காரர்கள்இருக்கப் போவதில்லை. அதிகாரிகளும் பட்டா இடத்தில் கிராவல் மண் அள்ளுவதை பெரிதாக கண்டு கொள்வதில்லை.

அதிகாரிகளின் மெத்தனப்போக்கு காரணமாகஇந்த நிலை தொடர்கிறது.நடவடிக்கை எடுக்கவேண்டிய வருவாய்த்துறை, கனிமவளத்துறை, போலீசார் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடித்து வருகிறது. தனியார் பட்டா இடங்களில் கிராவல் மண் கொள்ளையடிக்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட நபர்கள்கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் புகார் தெரிவித்துள்ளனர். இது போன்றமணல் கொள்ளையை அதிகாரிகள் அடங்கியகுழு அமைத்து கண்காணிப்பு செய்து தடுத்து நிறுத்த வேண்டும்.-----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X