மாநகராட்சி 5வது வார்டு பீ.பி.குளம் ரவுண்ட் அப்

Added : செப் 14, 2021
Share
Advertisement
மதுரை : கொசுக்கள் உற்பத்தி மையமாக மாறிய பாசி படர்ந்த பாலுரணி, பல மாதங்களாக செயல்படாது வீணான நம்ம டாய்லட் என தவிப்பில் உள்ளனர் மதுரை மாநகராட்சி 5வது வார்டு பகுதி குடியிருப்போர்.சாத்தையாறு அணையில் இருந்து வரும் பாசன நீர்வரத்து கால்வாய் இக்குடியிருப்பு பகுதி வழியாகதல்லாகுளம் பெருமாள்கோயில் குளத்தில் இணைகிறது. குறுகலான இக்கால்வாய் செடி, கொடிகள் வளர்ந்து புதர்

மதுரை : கொசுக்கள் உற்பத்தி மையமாக மாறிய பாசி படர்ந்த பாலுரணி, பல மாதங்களாக செயல்படாது வீணான நம்ம டாய்லட் என தவிப்பில் உள்ளனர் மதுரை மாநகராட்சி 5வது வார்டு பகுதி குடியிருப்போர்.

சாத்தையாறு அணையில் இருந்து வரும் பாசன நீர்வரத்து கால்வாய் இக்குடியிருப்பு பகுதி வழியாகதல்லாகுளம் பெருமாள்கோயில் குளத்தில் இணைகிறது. குறுகலான இக்கால்வாய் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. கழிவுநீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தபால்தந்திநகர் சந்திப்பு பிள்ளையார் கோயில் அருகே உள்ள பாலுாரணி பராமரிப்பின்றி பாசி படர்ந்து கொசுக்கள் உற்பத்தி மையமாக மாறியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தபால்தந்திநகர் ரோட்டில் மதுக்கடைகள் இருப்பதால் குடிமகன்கள் தொல்லை அதிகம் உள்ளது.

இதுகுறித்து இப்பகுதி குடியிருப்போர் கூறியதாவது... பாலுாரணிபராமரிக்கப்படுமா சேகர், பாலுாரணி: 25 ஆண்டுகளாக பாலுாரணி பராமரிப்பின்றி உள்ளது. பாசிகள் படர்ந்து, முட்செடிகள் வளர்ந்து ஊருணி இருக்கும் இடமே தெரியாத அளவுள்ளது. கழிவுநீர் கலப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களை பரப்புகின்றன. ஊருணியை துார்வாரி, தடுப்பு வேலி அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும். தபால்தந்திநகர் பஸ் ஸ்டாண்ட்டில் நம்ம டாய்லட் வீணாகி வருகிறது.

புதர் மண்டிய கால்வாய்

சதீஷ்குமார், ஜெ.கே.நகர்: இப்பகுதியை கடந்து செல்லும் காலங்கரை கால்வாய் புதர் மண்டியுள்ளதால் நாய்கள், கொசு தொல்லை தாங்க முடியவில்லை. கால்வாய் அருகே குப்பை தொட்டியும் உள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் தவறாமல் குப்பை அகற்ற செய்கிறார்கள். ஆனால், மக்கள் சிலர் குப்பையை தெருவில் வீசுகின்றனர். தெருவில் குப்பை கொட்டுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X