போலீஸ் செய்திகள் ...

Added : செப் 14, 2021
Share
Advertisement
மருமகனை கொன்ற மாமனார்செக்கானுாரணி: மதுரை கருப்பாயூரணி பால்பாண்டிக்கும் 42, செக்கானுாரணி போச்சம்பட்டி சமத்துவபுரம் மல்லிகாவுக்கும் 35, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மாமனார் வீட்டின் அருகில் வசித்துவந்த பால்பாண்டி போதைக்கு அடிமையாகி மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். தட்டிக்கேட்ட மாமனார் சந்தனம் இரும்பு குழாயால் பால்பாண்டியை தாக்கியதில் சம்பவ இடத்தில்

மருமகனை கொன்ற மாமனார்

செக்கானுாரணி: மதுரை கருப்பாயூரணி பால்பாண்டிக்கும் 42, செக்கானுாரணி போச்சம்பட்டி சமத்துவபுரம் மல்லிகாவுக்கும் 35, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மாமனார் வீட்டின் அருகில் வசித்துவந்த பால்பாண்டி போதைக்கு அடிமையாகி மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். தட்டிக்கேட்ட மாமனார் சந்தனம் இரும்பு குழாயால் பால்பாண்டியை தாக்கியதில் சம்பவ இடத்தில் பலியானார். செக்கானுாரணி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஊராட்சி தலைவரின் கணவர் தற்கொலை

திருமங்கலம்: உரப்பனுார் ஊராட்சி தலைவர் யசோதை. இவரது கணவர் பரமன் 65, குடும்ப பிரச்னையில் விஷம் குடித்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

பட்டாசு ஆலை வெடிவிபத்து; குத்தகைதாரர் கைது

பேரையூர்: முருகனேரியில் கடந்தாண்டு பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 8 பேர் பலியாயினர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குத்தகைதாரர் விருதுநகர் மாவட்டம் அழகர்சாமியை 42, டி.கல்லுப்பட்டி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X